உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்டெம் செல்
Page 1 of 1

குழந்தை பிறக்கும்போது அதன் தொப்புள் கொடி இரத்தத்திலிருந்து சேகரிக்கப்படும் இளம் ஸ்டெம் செல்களை நமது உடலில் செலுத்தி புதிய நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் மருத்துவ கல்லுரி ஆராய்ச்சியாளர்கள் எலியில் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, புதியதாக இரத்த மூலக்கூறுகளை உருவாக்கும் ஸ்டெம் செல்களை எலியின் எலும்புகளின் உட்பகுதியில் செலுத்தினர். இதனால் அதன் நோய் எதிர்ப்பு முற்றிலும் மாறிப் போனது. இளம் ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நோய் எதிர்ப்புத் திறனை நமது உடலில் உருவாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியாளர்களின் இலக்குக்கு அருகே அவர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிசோதனையை மனிதனில் மேற்கொள்வதற்கு முன்பு, இன்னும் பல புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது உள்ளது என்று இந்த ஆராய்ச்சியின் இணை ஆராய்ச்சியாளரும், ஸ்டான்ஃபோர்டு ஸ்டெம்செல் உயிரியல் துறைரீஜெனரேட்டிவ் மருத்துவத் துறையின் இயக்குனருமான இர்விங் வெய்ஸ்மேன் கூறினார்.
இப்பரிசோதனை ஒரு வகையான எலியில் மேற்கொள்ளப்பட்டது. அந்த எலியின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனிற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளது. எனினும் மனிதனில் இந்த ஆய்வை மேற்கொள்ள தடையாக உள்ள அனைத்து இடையூறுகளையும் வெற்றிகரமாக தாண்டி வருவோம் என்று இர்விங் வெய்ஸ்மேன் கூறினார்.
சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடலில் உள்ள திசுக்களின் ஒரு பகுதி உறைந்து விடும் தன்மையால் குறைபாடான நோய் எதிர்ப்பு முறை உருவாகிறது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்க வேண்டிய செல்களே அப்பணியை மேற்கொள்ளாது நம் உடலைத் தாக்கத் தொடங்கி விடுகின்றன. நம் உடலில் இருதயம், நுரையிரல் போன்றவற்றை தேவைப்பட்டால் மாற்றுவது போல் நோய் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்த வேண்டும். அப்போது நம் உடலில் உள்ள உறைந்த செல்கள் நம்மைத் தாக்காது என்று கூறினார்.
நமது எலும்புகளின் உள்பகுதியில் உள்ள கொழுப்புச் சதைப் பகுதியில் (மஜ்ஜை) புதிய இரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம்செல்களை செலுத்தி புதிய நோய் எதிர்ப்புத் திறனை நமது உடலில் உருவாக்க வேண்டும். அங்கு அவை இரத்தத்தின் அனைத்து செல்களையும் உருவாக்கும். புதிய ஸ்டெம்செல்களை உடலில் செலுத்தும் முன்பு பழைய செல்களை கதிரியக்கத்தாலோ, மருந்துகள் கொண்டோ அப்புறப்படுத்தவேண்டும்.
இவ்வாறு செய்வதால் எலும்புகளின் மேற்பகுதியில் உள்ள செல்கள் அகற்றப்படலாம். மேலும் மற்ற திசுக்களையும் சேதப்படுத்துவதால் இனப்பெருக்கத்தை தடுப்பது, மூளையைச் சேதப்படுத்துவது, புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பது போன்ற ஆபத்தான விளைவுகளையும் உருவாக்கும் நிலை உள்ளது.
எனவே எலும்பின் உட்பகுதியில் உள்ளகொழுப்புச் செல்கள் மற்றும் பிறதிசுக்களை பாதிக்காத இரத்தத்தை உருவாக்கும் இளம் ஸ்டெம் செல்களை உருவாக்குவதே இப்பிரச்சனைக்குத் தீர்வாகும் என்று இர்விங் வெய்ஸ்மேன் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்டெம் செல்!
» ஸ்டெம் செல் மூலம் பளபள மேனி!
» இந்தியாவில் முதல் முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை
» உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum