தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க...

Go down

முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க... Empty முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க...

Post  meenu Mon Jan 28, 2013 1:55 pm

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் முதுகுப் பகுதிக்கு கொடுக்க மறுத்துவிடுகின்றனர். முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள சில எளிய ஆலோசனையை பார்க்கலாம்.

குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்தும் போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை சுத்தம் செய்யவேண்டும்.

முதுகை 'ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும். ஒருசிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும்.

இதனால் முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும்.பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவி விடவும். இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum