வாழைப்பழ பேஸ் பேக்
Page 1 of 1
வாழைப்பழ பேஸ் பேக்
மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளான வாழைப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வாழைப்பழம் சிறந்த அழகுப் பொருளாக பயன்படுகின்றது.
• நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு கூழ் போல மசித்தது எடுத்து முகத்தில் பூசவும். பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். பின்னர் ஐஸ் க்யூப்பால் ஜில்லென்று ஒற்றி எடுக்கவும். சருமம் அழகாக புத்துணர்ச்சியாக மாறும்.
• மசித்த வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை கழுவலாம். பின்னர் முகத்தை மென்மையாக ஒற்றி எடுக்க சருமம் மென்மையாய் பளபளப்பாக மாறும். பனிக்காலத்தில் சிறந்த மாய்ஸ்சரைசராக இது செயல்படும்.
• வாழைப்பழத்துடன் ஊறவைத்த ஓட்ஸ் கலந்து கலந்து முகத்தில் மாஸ்க் போல போட்டு ஊறவைக்கவும். நன்கு காய்ந்த உடன் தேய்த்து கழுவவும். இது சருமத்தின் துளைகளில் ஒட்டியுள்ள அழுக்குகளும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும். இறந்த செல்கள் உதிர்ந்து சருமம் புத்துணர்ச்சியோடு காட்சி தரும்.
• வாழைப்பழத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமம் வழுவழுப்பாய் மென்மையாக மாறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரஞ்சு பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» வாழைப்பழ டிலைட்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» வாழைப்பழ டிலைட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum