நகங்களைப் பராமரிக்க சில டிப்ஸ்!
Page 1 of 1
நகங்களைப் பராமரிக்க சில டிப்ஸ்!
• நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.
• சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.
• விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.
• நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
• ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
• கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
• மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நகங்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்.
» உடல் அழகை பராமரிக்க...
» உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்.
» நகங்களைப் பாதுகாக்க...
» நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
» உடல் அழகை பராமரிக்க...
» உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்.
» நகங்களைப் பாதுகாக்க...
» நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum