தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் அழகை பராமரிக்க...

Go down

உடல் அழகை பராமரிக்க... Empty உடல் அழகை பராமரிக்க...

Post  meenu Mon Jan 28, 2013 1:02 pm


அழகாக இருக்கிறோம் என்றால் முகம் மட்டுமல்ல, உடலை வைத்தும் தான் சொல்வார்கள். அதிலும் உடலில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி பராமரிப்பை செய்ய வேண்டும். மேலும் சருமம் மிகவும் மென்மையாக இருக்க, சருமத்திற்கு சரியான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

முகத்தை விட கழுத்தில் தான் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படியெனில் கழுத்தின் பின்புறம், கூந்தல் அடிக்கடிப்படுவதால், அங்கு அதிகமான வியர்வை ஏற்பட்டு, அழுக்குகள் படிந்துவிடுகின்றன. ஆகவே மற்ற இடத்தை விட கழுத்திற்கு அதிகப்படியான கவனிப்பு தேவைப்படுகிறது.

மேலும் எந்த ஒரு கிரீமை முகத்திற்கு பயன்படுத்தினாலும், அதை கழுத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்து, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் முகமும் கழுத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். மேலும் சருமமும் மென்மையடையும்.

பெண்களின் கைகள் எப்போதும் பட்டுப் போன்று இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய கைகளை எப்போதும் சரியாக பராமரிக்க வேண்டும். உடல் அழகாக பராமரிக்கும் போது, தவறாமல் கைகளையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் கைகளில் அதிகமாக வெயில் படுவதால், அவை கருப்பாக மாறிவிடும்.

எனவே எப்போது கைகளை கழுவினாலும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். இதனால் கைகள் சற்று மங்கலாக காணப்படுவதைத் தவிர்க்கலாம். அதிலும் கை மூட்டுகளில் தான் அதிகமான கருப்பு காணப்படும். ஆகவே அங்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

இதனால் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம். பின்புறம் - வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பின்புறம் நன்கு ஈரப்பதத்துடன் காணப்படும். அதுமட்டுமல்லாமல் தினமும் குளிக்கும் போது, சிறிது மாய்ஸ்சுரைசரை தடவி குளிக்க வேண்டும். இதனால் பின்புறம் அழகாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum