தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரிசி ஃபேஸ் ஸ்கரப்

Go down

அரிசி ஃபேஸ் ஸ்கரப் Empty அரிசி ஃபேஸ் ஸ்கரப்

Post  meenu Mon Jan 28, 2013 1:29 pm

அரிசியை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்வதால், சருமம் நன்கு மிருதுவாகவும், சருமத்துளைகள் நன்கு விரிவடைந்து அழுக்குகள் வெளியேறி சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.

• அரிசியை ஊற வைத்துள்ள அரைத்து, பேஸ்ட் போல் செய்து அதில் சிறிது தேன் கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்கரப் செய்வதால் முகப்பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கும்.

• ஊற வைத்து அரைத்த அரிசி மாவுடன், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் சிறிது தேன் கலந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி அழகாகக் காணப்படும். அதிலும் இந்த முறையை எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் செய்வது நல்லது.

• அரிசியை தண்ணீரில் 10-20 நிமிடம் ஊற வைத்து, அரைத்துக் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்து, முகத்திற்கு போட்டு நன்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும். தக்காளி முகப்பரு மற்றும் வெள்ளைப்புள்ளிகளை நீக்கும் தன்னை கொண்டது. ஆகவே இந்த ஸ்கரப் செய்யும் போது, மூக்கில் நன்கு தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் அகன்றுவிடும்.

- முக்கியமாக ஸ்கரப் செய்யும் போது விரல்களை நீரில் நனைத்து பின் ஸ்கரப் செய்யுங்கள். அதிலும் மசாஜ் செய்யும் போது முன்னும், பின்னும் நன்கு சுழற்றி செய்ய வேண்டும். மேலும் ஃபேஸ் ஸ்கரப்களை தினமும் செய்யக்கூடாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum