கோடை வியர்வையில் குளிப்பவரா நீங்கள்?
Page 1 of 1
கோடை வியர்வையில் குளிப்பவரா நீங்கள்?
கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வை நாற்றம் தாங்க முடியாதது. இத்தனைக்கும் பார்க்க `டிப்டாப்'பாக இருப்பார்கள். இன்னும் சிலர் வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி இந்த வியர்வை நாற்றம் எட்டிப்பார்த்து விடுவது தான் கொடுமை.
அக்கினி நட்சத்திர வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து ஏ.சி. தியேட்டரே கதி என்று கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது பாடி டெம்பரேச்சரையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில் தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில் தான் அதிகம்-குறைவு என்று வேறுபடும்.
உண்மையில் வியர்க்காமல் இருந்தால் தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய்ப்பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரை சந்தித்து தங்கள்அதிக வியர்வைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம். வியர்வையினால் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை.
உடலில் சேர்ந்துள்ள நச்சுப்பொருள் வியர்வையோடு வெளியேறும்போது தான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் பாக்டீரியா இன்பெக்ஷனால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது. வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு.
சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறி விடுகிறது.
துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது. உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா இன்பெக்ஷனில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படி குளிப்பவர்கள்ஒருமாத்திரைஅளவு கற்பூரத்தை பக்கெட் தண்ணீரில் போட்டு முகத்தில் படாமல் உடலுக்குமட்டும் ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகி விடும்.
கோடையை சமாளிக்கும் விதத்தில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்த கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பெண்களின் வெள்ளைப்படுதலும் முக்கிய காரணம். உரிய மருத்துவ ஆலோசனை மூலம் இம்மாதிரி பெண்களின் வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடை காலத்தில் நீங்கள் உண்ணவேண்டிய உணவுவகைகள்.
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
» ஆரோக்கியமான கோடை கால உணவுகள்.
» கோடை கால சாலட்
» கோடை கால சாலட்
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
» ஆரோக்கியமான கோடை கால உணவுகள்.
» கோடை கால சாலட்
» கோடை கால சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum