தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடை கால சாலட்

Go down

கோடை கால சாலட் Empty கோடை கால சாலட்

Post  ishwarya Fri May 24, 2013 2:14 pm










கோடை கால சாலட் Bo970-150x150 கோடை கால சாலட் Bo972-150x150 கோடை கால சாலட் Bo971-150x150


தேவையான பொருள்கள்:


  1. முலாம் பழம் = 1
  2. தர்பூசணி = பாதி
  3. ஆரஞ்சு பழச்சாறு = 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு = 2 ஸ்பூன்
  5. மிளகு = கால் ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை = சிறிதளவு


செய்முறை:


  • தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி
    சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன
    பெட்டியில் வைத்து கொள்ளவும்.
  • மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாத்திரத்தில் எலுமிச்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மிளகுத்தூள்,
    தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து
    வெட்டு வைத்துள்ள பழங்களின் துண்டுகளை போட்டு கலந்து பரிமாறவும்.


கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சாலட்.

மருத்துவ குணங்கள்:


  • முலாம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக
    காணப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிக சூடு குறையும்.
  • முலாம் பழத்தில் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
  • மேலும் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ” அதிகம் இருப்பதால் புற்று
    நோய், இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது.
    செரியாமை, வாய்வு மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல்
    தடுக்கும்.
  • இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிது.
  • மேலும் கர்ப்பமான பெண்கள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பழமாகும். பெண்கள்
    அதிகமாக சாப்பிட கூடிய பழமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பழம்.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum