தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலிப்பு நோய்

Go down

வலிப்பு நோய் Empty வலிப்பு நோய்

Post  meenu Sun Jan 27, 2013 2:09 pm

காக்கா வலிப்பு நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. முன்பு இதற்கு திட்டவட்டமான மருந்தோ, சிகிச்சை முறையோ இல்லை. இதனால் வலிப்பு நோய் வந்தவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் வருந்துகின்றனர். எனவே வலிப்பு நோயை பற்றிய உண்மைகளை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம்.

வலிப்பு நோயை பற்றிய சரியான உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது பயங்கர நோய் அல்ல. வலிப்பு நோயாளி எவரும் இந்த நோயை பற்றி வெட்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் சரியான சிகிச்ëசை முறையினை மேற்கொண்டால் அதனை கட்டுப்படுத்த முடியும். அன்றாட வாழ்க்கையை தொடரவும் முடியும்.

காக்கா வலிப்பு நோயை பற்றி நினைக்கும்போது சராசரி மனிதனுக்கு ஆறுவகையான கேள்விகள் எழும். அந்த கேள்விகளையும் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் இப்போது பார்ப்போம்.

1. வலிப்பு நோய் என்றால் என்ன?

2. வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

3. வலிப்பு நோயாளி சராசரி மனிதனிடம் இருந்து வேறுபடுகிறானா?

4. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, பள்ளிக்கு போகலாமா?

5. வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா?

6. வலிப்பு நோயாளி, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?

1. வலிப்பு நோய்....

முதலில் வலிப்பு நோய் என்றால் என்ன? என்பதை பார்ப்போம். வலிப்பு நோய் மூளையில் உண்டாகும் ஒருவகை எரிச்சலால் ஏற்படுகிறது. இந்த எரிச்சலுக்கு காரணம், பிறக்கும்போதோ, பிறந்த பின்னரோ, நிகழ்ந்த சம்பவங்களின் விளைவு ஆகும். அல்லது மூளையில் ஏற்பட்ட நோயின் விளைவு ஆகும். அல்லது ஒரு காயத்தின் விளைவு ஆகும். வலிப்பு நோயால் மூன்று வகைகள் இருக்கின்றன. அவை: 1. பெருவலிப்பு, 2. சிறுவலிப்பு, 3. சைக்கோ- மோட்டார் வலிப்பு, பெருவலிப்பின்போது மனிதன் தன் நினைவை இழந்து கீழே விழுகிறான். உடம்பும் கைகால் போன்ற மற்ற உறுப்புகளும் சுண்டிச் சுண்டிச் இழுத்து துடிக்கின்றன. சற்று நேரம் வரை, நினைவை இழந்த நிலைமையில் அவன் இருக்கலாம்.

வலிப்பு நோயாளியும் சராசரி மனிதனும்.....

மூன்றாவது கேள்வி வலிப்பு நோயாளிக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறதா? வலிப்பு நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் எந்த வகையிலும் வேற்றுமை இல்லை. வலிப்பு நோயாளிகளின் உடலும் உள்ளமும் மற்றவர்களைப் போலவே சுறுசுறுப்பாய் இருக்கின்றன. அவர்களால் நன்றாய்ப் படிக்க முடியும். அவர்கள் எதையும் செய்யும் திறன் பெற்றவர்கள், சமூக வாழ்க்கையில் கலந்து பழகத் தகுதியும் திறனும் அவர்களுக்கு மற்றவர்களைப் போலவே உண்டு. அவர்கள் சுறுசுறுப்புடன் தனக்குரிய செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எத்தனை திறமைகளைப் பெற்றிருந்தாலும், ஈடுபடும் செயல்களில் பெருமையை வலிப்பு நோயாளிகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தான் செய்வதற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அதன் மூலம் தான் செய்த பயனுள்ள காரியங்களை உணரலாம்.

வலிப்பு நோயும் மண வாழ்வும்...

வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா என்பது நமது சமூக அமைப்பில் முக்கியமான கேள்வியாகும். உடல் நடுக்கம் நன்றாகப் கட்டுப்படுத்தப்பட்டு, மருந்தும் ஒழுங்காய்ச் சாப்பிட்டு வந்தால் மணம் செய்து கொள்ளலாம். இதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பே, பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ உள்ள குறையைப் பற்றிச் சம்பந்தி வீட்டாருக்குத் தெரியும்படி செய்வதே நல்லது. இதனால் குடும்பத்தில் ஏற்படும் மன வருத்தமும் சச்சரவும் தவிர்க்கப்படும். தாம்பத்ய வாழ்க்கை எந்த வகையிலும் வலிப்பு நோயை மோசமாக்காது. இருந்தாலும், முறையான தாம்பத்தியத்திற்கு வழியில்லாத போது, ஏமாற்றமும் பரபரப்பும் ஏற்படும்.

அவற்றால் வலிப்பு மேலும் மோசமாகும். கணவனும் மனைவியும் வலிப்பு நோயாளிகளாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரப் பெரிதும் வாய்ப்புண்டு. அதனால், கணவனும் மனைவியும் வலிப்பு நோயாளிகளாக இருந்தால், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றும்படி பெரும்பாலான டாக்டர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

கவனத்தில் வைக்க வேண்டியவை....

இறுதியாக வலிப்பு நோயாளி கவனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள். வலிப்பு நோயாளி, தொடர்ந்து நரம்பியல் மருத்துவரிடம் (நரம்பியல் நிபுணரிடம்) ஆலோசனை பெற வேண்டும்.

நோயாளி தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும், போதுமான அளவு தூங்க வேண்டும், பட்டினி கிடக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும், மதுபானம் குடிக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டுவதோ கார் ஓட்டுவதோ கூடாது. சாதாரணமாக வேலை செய்ய முடியும். உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் கூறும் விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum