தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

40 வயதிற்கு மேல் அதிக பாதிப்பை தரும் முதுகு வலி

Go down

40 வயதிற்கு மேல் அதிக பாதிப்பை தரும் முதுகு வலி Empty 40 வயதிற்கு மேல் அதிக பாதிப்பை தரும் முதுகு வலி

Post  meenu Sun Jan 27, 2013 1:28 pm

அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் எனக்கு தெரிந்து நாற்பது வயதிற்கு மேல் உள்ள அனேகர் இவ்விரு வலிகளால் அவதி படுகின்றனர். இவ்வகை நோய்களை பற்றிய அறிவும்,தீர்வும் நமக்கு மிகவும் முக்கியம்.

மனிதர்களுக்கு ஏன் முதுகு வலி? இயல்பாகவே இதர பாலூட்டி விலங்கினங்கள் போல் இல்லாமல் நாம் நிமிர்ந்து நடப்பது இதன் முக்கிய காரணம் ஆகும். நான்கு கால்களில் இதர பிராணிகள் போல் நாம் நடந்தால் முதுகு புவி ஈர்ப்பு விசைக்கு ஆட்படாது நாம் நிமிர்ந்து நடப்பதால் உடலின் எடையை சமன் செய்யும் தாங்கவும் முதுகெலும்பு நமக்கு உறுதுணையாக உள்ளது.

ஆயினும்,முதுகெலும்பின் இடையே இருக்கும் ஜவ்வு புவிஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் இயல்பாக அனைத்து மனிதர்களுக்கும் தேய்வு ஏற்படுகிறது. முப்பத்தி மூன்று எலும்புகள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கபடுவதால் வரும் அமைப்பே மது கெலும்பு இந்த எலும்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு குழாய் தான் முதுகு தண்டு, இது மண்டை ஓட்டின் அடிப்புறம்(நம் பின் மண்டையில் உள்ள ஓட்டை) வழியாக மூளைக்கு நுழைகிறது.

முதுகு தண்டிலிருந்து நம் உடல் முழுவதும் நரம்புகள்- எலும்புகளின் இடையே உள்ளது. இந்த நரம்புகள் மூளையிலிருந்து நமது தசைகளுக்கு மூளையின் கட்டளையை எடுத்து செல்லும் அதன் மூலம் நாம் கை கால்கள் அசைப்பது எல்லாம் சாத்தியமாகிறது. இதே போல் நமது உடலில் இருந்து நாம் பெரும் உணர்வுகள் இந்த நரம்புகள் மூலம் உள்வாங்கப்பட்டு தண்டு வடம் மூலம் மின் அதிர்வு சமிஞ்கைகளாக மூளையை சென்று அடைகிறது.

ஒரு முதுகு எலும்பிற்கும் மற்றொன்றிற்கும் இடையில் ஒரு மெத்தை போன்ற அமைப்பு உள்ளது. இதன் பெயர் `டிஸ்க்' இதில் பசை தன்மையும் நீர்தன்மையும் அதிகம் உண்டு. இந்த டிஸ்க் இரு எலும்புகளுக்கான உரசல் ஏற்படாமல் அதிர்வுகளை தாங்கும் வல்லமை கொண்டது.

இதன் மூலம் நடுவில் செல்லும் தன்டுவடத்திற்கு எளிதில் பாதிப்பு வரமால் காக்கிறது. மேலும் முதுகு தண்டிலிருந்து வரும் நரம்புகள் முதுகு எலும்புகளுக்கு நடுவில் உள்ள இந்த இடைவெளி மூலமாக வெளியில் வருகிறது. எலும்புகள் இந்த நரம்பை அழுத்தாமல் இந்த டிஸ்க் ஒரு குஷன் போல செயல்படுகிறது.

மொத்தம் முப்பத்தி ஒரு ஜோடி முதுகு தண்டு நரம்புகள் நம் உடலில் உள்ளன. இந்த நரம்புகள் மூப்பத்தி மூன்று எலும்புகளுக்கு மத்தில் உள்ளன. இதில் முதல் எட்டு ஜோடி நரம்புகள் கழுத்து மற்றும் கைகளை கவனிக்கின்றன. அடுத்த பனிரென்டு ஜோடிகள் நெஞ்சு, விளா, வயிறு பகுதிகளை கவனிக்கின்றன.

அடுத்து உள்ள ஐந்து ஜோடி நரம்புகள் (லம்பார்) கால்களின் தசைகளை கவனிக்கின்றன. அடுத்து வரும் ஐந்து ஜோடிகள்(சாக்றல்) மற்றும் ஒரு ஜோடிவால் நரம்பு இடுப்பு பகுதியை மலகுடலை பிறப்பு உறுப்புகளை கவனிக்கின்றன.

முதுகு தண்டு- முதுகெலும்பின் முழு நீளம் வரை இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக முதுகு தண்டு லம்பார் முதுகெலும்புகள் அத்தோடு முடிந்து விடும், அதன் பின் எலும்புகளின் வழியாக நரம்புகள் மட்டும் வெளிவரும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum