தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணைக்கிழங்கு மசியல்

Go down

கருணைக்கிழங்கு மசியல் Empty கருணைக்கிழங்கு மசியல்

Post  oviya Sat Jul 06, 2013 9:04 pm

தேவையான பொருட்கள்:

பழைய கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
தக்காளி - 2
புளி - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1-1/2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 4 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)

* பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும்.

* பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.

சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum