கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு மசியல்
Karunai Kizhangu Masiyal
கருணைக்கிழங்கு மருத்து குணம் நிறைந்தது. இது மூலநோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனை சமைத்துக் கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து தாளிக்க
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கருணைக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். குக்கரிலும் வேக வைக்கலாம். கிழங்கின் தோலை உறித்து நன்றாக மசித்து வைக்கவும்.
பின்னர் வானலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெடித்த உடன் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். அந்த கலவையில் மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்கினை போட்டு நன்றாக பிரட்டவும்.
கிரேவி அதிகமாக வேண்டுமெனில் கால் டம்ளர் தண்ணீர் கூடுதலாக விடலாம். மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறலாம். மசியலானது எண்ணெய் மினுப்போடு சூப்பராக வரும். சூடாக சாதத்தில் போட்டு சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்தது.
கருணைக் கிழங்கை நீண்டநாட்கள் வைத்திருந்து சமைத்தால்தான் காரல் தன்மை இன்றி இருக்கும். நல்லெண்ணெயில் சமைப்பதால் அரிப்பு இருக்காது. ருசி கூடுதலாகவும் இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருணைக்கிழங்கு மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» சமையல்:கருணைக்கிழங்கு மசியல்
» அரைக்கீரை மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» சமையல்:கருணைக்கிழங்கு மசியல்
» அரைக்கீரை மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum