அழற்சி இல்லாத மூட்டு வாதம்
Page 1 of 1
அழற்சி இல்லாத மூட்டு வாதம்
அழற்சி இல்லாத மூட்டு வாதத்தின் முக்கிய காரணம் `ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்' எனப்படும் தேய்மானமே. இந்த நோயானது 20 வயதில் ஆரம்பித்து 40 வயதில் வெளிப்படும். 65 வயதிற்கு மேல்தான் எக்ஸ்ரே. போன்ற ஆய்வுகளில் தெரிந்து கொள்ளலாம். இதனால் 40 சதவீதம் பேருக்கு எக்ஸ்ரேவில் மாற்றங்கள் இருக்காது.
இந்த நோய் ஏன் பாதிக்கிறது என்று பார்த்தால் அதிகப்படியான உடல் எடையாலும் பாதம் இடுப்பு போன்று மற்ற இடங்களின் பிரச்சினையால் முட்டியின் உடல் கூற்றியல் நுட்பம் மாறி உராய்வு தன்மை அதிகமாதலும் மூட்டு இணையின் ஜவ்வு மற்றும் கார்ட்டிலேஜூக்கு வயதாகி நீர்தன்மை குறைவதாலும் வருகிறது.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் நோய் இருந்தால் அதிக எடை தாங்கும் போதும், மூட்டுகளின் அசைவின் போதும் வலி ஏற்படும். ஓய்வெடுப்பதால் வலி குறையும். தூங்கி எழுந்த பிறகு நீட்டி மடக்க முடியாமலும் சில நேரம் வீக்கத்துடன் காணப்படும். இதனால் சில பேருக்கு முட்டி உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ வளைந்து விடும்.
இதை சாதாரண எக்ஸ்ரே கொண்டு கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஜவ்வு கிழிகளோ அல்லது மெனிஸ்கள் கிழிகளோ ஆர்த்ரைட்டிஸ் வரும் போது எம்.ஆர்.ஐ. தேவைப்படும். இதற்கு நடைமுறை மாற்றங்களாக எடை குறைத்தல், குவாட்ரிஸப்ஸ் தசையை வலப்படுத்தும் உடற்பயிற்சி, நடை குச்சி கோள் உபயோகித்தல், செருப்புகளில் மாற்றங்கள் மற்றும் வலிமாத்திரைகள் கொண்டு சரி செய்யலாம்.
அப்படியும் குறையாத நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மூட்டு மாற்றம் செய்வது. நடைமுறையில் உள்ளது. அதற்கு பதிலாக மூட்டு இன்ஜெக்ஷன் சிகிச்சை மற்றும் அதிநவீன புரோளோ தெரபி என்னும் முறையில் ஓசோன், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற சிகிச்சைகள் சிறப்பான பலனை அளிக்கும்.
இந்த வகை மருத்துவ சிகிச்சைகள் நோயின் ஆரம்ப காலத்தில் செய்வதால் முழுமையாக நோயிலிருந்து விடுதலை அடையலாம். நாள்பட்ட நோய்களுக்கு ரேடியோ அலை அபலேஷன் எனப்படும் சிகிச்சையை கால் முட்டியில் ஜெனிகுலேட் நரம்புகளுக்கு செய்து மூட்டு வலியை வெற்றி காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூட்டு வாதம் மூட்டு வாதம்
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
» மூச்சுக்குழல் அழற்சி
» ஆம வாதம் ஆம வாதம்
» வாதம் குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum