தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆம வாதம் ஆம வாதம்

Go down

ஆம வாதம் ஆம வாதம் Empty ஆம வாதம் ஆம வாதம்

Post  meenu Thu Feb 28, 2013 2:36 pm

எகிப்து நாட்டின் மம்மிகளில் கூட, பண்டைய நாட்களில் இவ்வகை ஆர்த்ரைடிஸ் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், மலைகளில் வசிப்பதாலோ, உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, மற்றும் பரம்பரைக் காரணத்தினாலோ இது ஏற்படலாம். 100 மனிதர்களில் ஒருவருக்கு வருகிறது.
ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் பெரும்பாலும் கால் மூட்டுக்களையும் கை விரல்களையும் தான் முதலில் பாதிக்கிறது. பின்னர் தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கை மூட்டு போன்றவற்றிற்குப் படிப்படியாக பரவுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லா மூட்டுகளுமே ஒட்டு மொத்தமாக வீக்கத்திற்குட்பட்டு அழற்சியை அதிகப்படுத்தி விடுகின்றன. வலி அதிகமாக இல்லாவிடினும், உடல் இயக்கத்திற்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மிகப் பெரிய மூட்டுக்களான பந்துக்கிண்ண மூட்டு, கைமூட்டு போன்றவற்றில், அதிக அளவு பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் வெப்பத்தையும், சிவந்த தோற்றத்தையும் உண்டாக்கி விடுகின்றன. எலும்புகளின் கோளாறை எக்ஸ்ரே செய்து பார்ப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். நரம்பிழை மற்றும் தசை நார்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் கூட ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் தோன்ற வழி வகுக்கலாம்.
அழற்சி
ஆமவாதத்தின் முக்கிய பாதிப்பு அழற்சி. நாட்பட்ட தீவிர அழற்சியில் வலி, சூடு, சிவந்து போதல், வீக்கம், பாதிக்கப்பட்ட இடம் செயலற்று போதல் இவை இருக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக ரத்தம் பாய்வதற்கு உதவும். ஆனால் நாட்பட்ட அழற்சியில் இந்த நிவாரணமும் இருக்காது. ஆமவாதத்தில் மூட்டுகளின் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்படும். எலும்புகளின் சிதைவு நோய் வந்த முதல் அல்லது இரண்டாம் வருடத்திலேயே ஆரம்பிக்கும். எனவே ஆமவாதத்தை சீக்கிரம் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் ஆமவாதத்தை உறுதிப்படுத்தும்
1. குறைந்த பட்சம் 3 மூட்டுகள் பாதிக்கப்படும். வீக்கம் தோன்றியிருக்க வேண்டும். கை எலும்புகள், விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. தோலடியில் சிறிய வீக்கங்கள் தோன்றுதல்
3. காலையில் கால்கள் ‘கல்’ போல் விறைப்பாக இருத்தல் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், அதுவும் 15 நாட்களுக்கு தொடர்ந்தால்
4. பாதிக்கப்பட்ட இடங்களில் சீரான வீக்கம் காணப்படும்.
5. இரத்தப் பரிசோதனையில் இருந்தால்
6. எக்ஸ் – ரே மூலம் பழுதடைந்த பாகத்தை பரிசோதித்தல்
காரணங்கள் / அறிகுறிகள்
1. “ஆடோ இம்யூன்” நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்கள், தவறுதலாக, நல்ல செல்களையே எதிரி என்று நினைத்து அழித்து விடுவது. இந்த தவறு எப்படி ஏற்படுகிறது என்பது சரிவர தெரியவில்லை. மூட்டுகளில் ‘அசுர’ ஸினோவியல் செல்கள் உருவாகி, மூட்டு ஜவ்வு, எலும்புகளை அழித்து விடும். தேய்மானம் ஏற்பட்டு வலி, அங்கவீனம் உண்டாகும். இந்த வேலியே பயிரை மேயும் நிலை, இந்த வியாதியின் பெரிய பிரச்சனையாகும்.
2. மூட்டுக்களில் (இரண்டு எலும்புகளுக்கு இடையே), உதாரணமாக தொடை எலும்பும் முழங்கால் எலும்பும் சந்திக்கும் இடமான முழங்கால் மூட்டிலே, உள்ள கார்டிலேஜ் ஒரு ‘குஷன்’ போல், குனிந்து, நிமிர்ந்து, நடக்கும் போதெல்லாம் ஏற்படும் அதிர்ச்சியை ஏற்றுக் கொண்டு விடும். இதில் இருக்கும் புரதம் குறைந்தால் இந்த ஜவ்வு தேய்ந்து போகலாம். உராய்வுகளை வழவழப்பாக ஆக்க, சினோவியம், மூட்டு திரவத்தை சுரக்கிறது. மேலே சொன்ன ‘ஆட்டோ இம்யூன்’ தவறினால், சினோவியம் பாதிக்கப்பட்டு, வீங்கிவிடுகிறது. அதன் திரவம் கெட்டியாகி, விடுகிறது. அதிகமாக திரவத்தை, தேவையின்றி சுரந்து விடும். இதனால் வீக்கம், வலி, விறைப்பு, இவை ஏற்படுகின்றன. மூட்டு சிவந்து விடும். இது முதல் கட்டம். இதில் நடக்கும் போதும் மூட்டுவலி ஏற்படும். மூட்டில் வீக்கம், தொடர்ந்த வலி இரண்டாம் கட்டம். காலை தூக்கினாலே வலித்தால் 3ம் கட்டம். ஒய்வாக இருக்கும் போதே வலித்தால் 4 வது கட்டம்.
3. முதலில் 2,3 மூட்டுக்களில் ஆரம்பித்து, நிதானமாக பரவுகிறது. இதன் தீவிரம், பாதிப்பு, மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். முதலில் தாக்கப்படும் மூட்டுக்கள் – விரல்களின் நடு கணுக்கள், மணிக்கட்டு, கால் விரல்களின் அடிபாதம், தோள் பட்டை, முழங்கால், முழங்கை, கணுக்கால்.
4. சோகை உண்டாகும்.
5. கழுத்து வலி, வாய், கண்கள் உலர்ந்து போதல்.
6. மூட்டு வலி, மூட்டுக்களில் வீக்கம், வேதனை தவிர, உடல் எடை குறையும்.
7. காலையில் தொடை, கால்கள் விறைத்திருக்கும். 30 நிமிடத்துக்கு மேல் நீடித்திருந்தால் மூட்டு வியாதியின் அறிகுறி.
8. ஆமவாத முடிச்சுகள்
9. பசியின்மை, எப்போதும் சோர்வு.
10. தசை பலவீனம், நடப்பது.
11. மலச்சிக்கல், தூக்கமின்மை, தலைச்சுற்றல் வாந்தி.
12. ஜுரம் வரலாம்.
13. தற்காலிகமாக உடல் எடை குறையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum