மூச்சுக்குழல் அழற்சி
Page 1 of 1
மூச்சுக்குழல் அழற்சி
மூச்சுக்குழல் அழற்சி:
பொதுவாக மனித வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் வாகனங்கள் போக்குவரத்து பெருத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது. இந்த நச்சு கலந்த நோய்கிருமிள் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதனால் தொண்டை, மூக்கு, சுவாசக்குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் அழற்சி ஏற்படுகிறது. அன்றியும் குத்து இருமல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் இறுக்கம், உடல் வெப்பமடைதல், வயிற்றுப்பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற தொல்லைகளும் ஏற்படுகின்றன.
குறி குணங்கள்:
மூச்சுக்குழாய்களில் வீக்கம் ஏற்படுதலை மூச்சுக்குழாய் அழற்சி என்று பெயர். வைரஸ், பாக்டீரியா, ஒவ்வாத ஒரு பொருளை முகர்ந்து பார்த்தல், இரசாயனம் போன்றவற்றால் ஏற்படுகிறது. மேலும் புகை குடித்தல், மது அருந்துதல், துரித உணவை உட்கொள்ளல் போன்றவைகளாலும் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுகிறது. இதனால் மூச்சுக்குழாய்கள் பெருத்து மூச்சு விடுவதற்கே மிகச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
மருந்து 1: கடுக்காய் கஷாயம்
தேவையானப் பொருட்கள்:
கடுக்காய்த் தோல் = 10 கிராம்
கோரைக் கிழங்கு = 10 கிராம்
கொத்தமல்லி விதை = 10 கிராம்
செஞ்சந்தனம் = 10 கிராம்
வெட்டி வேர் = 10 கிராம்
தாமரைத்தண்டு = 10 கிராம்
சீந்தில் கொடி = 10 கிராம்
வட்டத் திருப்பி = 10 கிராம்
கடுகுரோகிணி = 10 கிராம்
ஆடாதோடா இலை = 10 கிராம்
வெட்பாலைப் பட்டை = 10 கிராம்
சுககு = 10 கிராம்
சிறு கொன்றைக்காய் = 10 கிராம்
செய்முறை:
இவற்றையெல்லாம் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு 60 கிராம் பொடியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் ஏற்றிச் சறு தீயாக எரித்து, 150 மி,லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
1 வேளைக்கு 50மி.லி வீதம் 1 நாளைக்கு 3 வேளை சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
மூச்சுத் திணறல், வயிற்று உப்புசம், நா வறட்சி, காய்ச்சல், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
மருந்து 2: கண்டங்கத்திரி லேகியம்
தேவையானப் பொருட்கள்:
சீந்தில் கொடி=20 கிராம்
செவ்வீயம்=20 கிராம்
சித்திரமூலப் பட்டை=20 கிராம்
கோரைக் கிழங்கு=20 கிராம்
கற்கடக சுருங்கி=20 கிராம்
சுக்கு=20 கிராம்
திப்பிலி=20 கிராம்
மிளகு=20 கிராம்
தோல் கொன்றை=20 கிராம்
சிறு தேக்கு=20 கிராம்
சித்தரத்தை=20 கிராம்
பூலாங்கிழங்கு=20 கிராம்
மூங்கில் உப்பு=20 கிராம்
சர்க்கரை=20 கிராம்
கண்டங்கத்திரி வேர்=2 கி.கி
தண்ணீர்=10 லிட்டர்
செய்முறை:
1. சர்க்கரை, கண்டங்கத்திரி வேர், தண்ணீர் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து இடித்து, பொடித்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
2. கண்டங்கத்திரி வேரை ஒன்று, இரண்டாக இடித்து அதை 10 லிட்டர் நீரில் கலந்து, அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்து 2 லிட்டர் ஆகச் சுண்ட வைத்து மருந்தைக் கசக்கிப் பிழிந்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்து கரைந்த பிறகு மீண்டும் வடிகட்டிப் பாகுபதம் வரும் சமயம், இடித்து வைத்துள்ள பொடியைப் கொட்டி, கட்டி வராமல் கிளறி லேகியமாக்கவும். ஆறிய பிறகு அத்துடன் நல்லெண்ணெய், தேன், நெய் அனைத்தும் 160 மி,லி, சேர்த்து கலந்துவைத்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
1 டீஸ்பூன் ஒரு வேளைக்கு, 1 நாளைக்கு 2 வேளை சாப்பிடவும். பின் பால் குடிக்கவும்.
தீரும் நோய்கள்:
மூச்சுத் திணறல், இருமல், சுவாச நோய், ஆஸ்துமா முதலியவை நீங்கும்.
மருந்து 3: திப்பிலி ரசாயனம்
தேவையானப் பொருட்கள்:
திப்பிலி=320 கிராம்
உலர்ந்த திராட்சை=320 கிராம்
அதிமதுரம்=80 கிராம்
சுக்கு=80 கிராம்
மூங்கில் உப்பு=80 கிராம்
தேன்=80 கிராம்
சர்க்கரை=1 கி,கி
நெல்லிக்காய் ரசம்=5 லிட்டர்
செய்முறை:
1. திராட்சை, சர்க்கரை, நெல்லிக்காய் ரசம்,தேன் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காய வைத்து, நுண்ணிய பொடியாக இடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
2. நெல்லிக்காய் ரசத்தில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில் வைத்துச் சிறு தீயாக எரித்து, மீண்டும் வடிகட்டி, பாகுபதம் வந்த பிறகு, இடித்து வைத்துள்ள பொடிகளை கொட்டி கிளறி, ஆறிய பிறகு தேன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு வேளைக்கு 1-2 டீஸ்பூன், 1 நாளைக்கு 2,3 வேளை சாப்பிடவும். பின் சூடான பால் குடிக்கவும்.
தீரும் நோய்கள்:
எல்லா வகையான இருமல், சுவாசக் குழாய் அழற்சி, பசியின்மை, மலச்சிக்கல், காமாலை, சுவாச நோய்கள் ஆகியன தீரும்.
மருந்து 4:
ஓமத்தை எடுத்துக் கல், மண், தூசி நீக்கி அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, வாயில் போட்டு மெதுவாக மென்று விழுங்குவதால் கப இருமல், மூச்சுக்குழல் அழற்சி, தொண்டை கமறல், தொண்டை அழற்சி, வாய்வு உப்புசம், கபம் ஆகியவை நீங்கிப் பசியை உண்டாக்கும்.
மருந்து 5:
தேவையானப் பொருட்கள்:
ஓமம் சுத்தம் செய்து பின் வறுத்தது=100 கிராம்
திப்பிலி லேசாக வறுத்தது=50 கிராம்
செய்முறை:
இரண்டையும் தனித்தனியாக இடித்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
கால் அல்லது அரை ஸ்பூன் அளவு 1 நாளைக்கு 2 அல்லது 3 வேளை தேனில் கலந்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
கப இருமல், சுவாசகாசம் முதலியவை நீங்கும்.
மருந்து 6:
தேவையானப் பொருட்கள்:
ஓமம் தூசி, கல் நீக்கியது= 100 கிராம்
இந்துப்பு இடித்து, பொடித்தது= 10 கிராம்
ஆடாதோடை இலை இடித்து பிழிந்து வடிகட்டிய ரஸம்= 50 மி்லி
இஞ்சி சாறு= 50 மிலி
எலுமிச்சை பழச்சாறு= 50 மிலி
புதினா சாறு= 50 மிலி
செய்முறை:
ஓமம், இந்துப்பு இரண்டையும் அகலமான பீங்கான் பாத்திரத்தில் போட்டுச் சாறுகளை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றித் தினசரி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
1 நாளைக்கு 2,3 வேளை தேன் அல்லது வெந்நீருடன் கலந்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
கபம், இருமல், சளி, சுவாசம், வாய்வு, அஜீரணம் ஆகியவை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அழற்சி இல்லாத மூட்டு வாதம்
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum