தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி செய்யும் விக்ரம்!

Go down

முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி செய்யும் விக்ரம்! Empty முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி செய்யும் விக்ரம்!

Post  ishwarya Mon May 27, 2013 5:41 pm

கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவுக்கு வந்த விக்ரமுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் சான்ஸ் கிடைக்கவிலலை. அதனால் சில படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்தவர், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பல ஆண்டுகள் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்தார். அப்படி சினிமாவில் சுமார் 14 ஆண்டுகளாக போராடிய பிறகுதான் சேது படத்தின் மூலம் ஒரு ஹீரோ அங்கீகாரத்தை பெற்றார் விக்ரம். அதன்பிறகு பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட படங்கள் அவரை சிறந்த நடிகராக்கின.

என்றாலும், ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்தானே. அந்த வகையில், ராஜபாட்டை படத்தில் நடித்தபோதில் இருந்தே விக்ரமின் முகத்தில் சுருக்கம் தெரிந்து விட்டது. அடுத்தடுத்து நடித்த தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அது இன்னும் அதிகமாக தெரிந்ததால், உடம்பை இளமையாக வைத்திருக்கும் உணவுகள், உடற்பயிற்சிகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்திவருகிறார் விக்ரம். அதோடு, மனதை எப்போதும் இளமையாகவும், சந்தோசமாகவும் வைத்திருப்பதும் உடலை இளமையாக வைக்கும் என்பதால் இப்போதெல்லாம், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்தால்கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர். வெற்றி போனால் அடுத்த படத்தில் ஈட்டிக்கொள்ளலாம். இளமை போனால் மீட்க முடியுமா? என்ற கணக்கில் உடல் அழகு, இளமையை பராமரிப்பதிலேயே தற்போது முழுக்கவனத்தையும் பதித்திருக்கிறார் சீயான்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum