துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1

நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறின. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அரசு உத்தவிட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அப்துல்ரகீம் துப்பாக்கி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய படக்காட்சிகளை கைப்பற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அந்த படத்துக்கு 'யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறு. அந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் துப்பாக்கி படத்தை நேரில் பார்த்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறினார்கள். துப்பாக்கி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை தமிழக அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் இந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுப்பது குறித்து மார்ச் மாதம் இறுதிக்குள் மத்திய தணிக்கை குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை விவகாரம்: நடிகர் பாக்கியராஜ், சந்தானம் சமரச தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவு
» அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum