தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடிக்கொடை விழா

Go down

ஆடிக்கொடை விழா Empty ஆடிக்கொடை விழா

Post  birundha Sun May 26, 2013 3:06 pm


உலகில் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்பலங்களில் அழுந்தி, தன்னையும் அறியாது. இறைவனையும் அறியாது மயங்கி நிற்கின்றன. உயிர்கள் மும்மலங்களின் கட்டுகளில் இருந்து விடுபட்டு இறை நாட்டம் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த ஒப்பரிய தத்துவத்தை மானிடர்கள் அறிந்து இறைவழிபாடுகளில் ஈடுபட்டு உய்ய வேண்டும் என்று கருதிய நம் முன்னோர்கள் கோயில்களில் விழாக்களை நடத்தி இறை உணர்வை ஊட்டினர்.

எல்லாத் திருக்கோயில்களிலும் விழாக்களும் பெருவிழாக்களும் நடத்தப்படுவது இந்து மதத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாகத் திருவிழா என்றால் 10 நாள்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் நடப்பதைத் திருவிழா என்றும், மூன்று அல்லது அதற்குக் குறைந்த நாட்கள் நடப்பதைக் கொடைவிழா என்றும் அழைக்கின்றார்கள்.

கொடை என்பதற்கு ஈகை, கொடுத்தல் தியாகம் எனப் பொருள்படும். அவனின்றி அணுவும் அசையாது இறைவன் அருளின்றி மானிடர்கள் உய்ய இயலாது. இறைவன் கருணை வடிவானவன். இறைவன் உயிர்கள் வாழும் பொருட்டு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் மூலம் மனிதனுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், கைம்மாறு கருதாது கொடையாக அளிக்கின்றான்.

இறைவன் கொடையாகக் கொடுத்த பெரும் செல்வத்தை மனிதன் நன்றிப் பெருக்கோடு இறைவனுக்குப் படைத்துக் கொண்டாடுவது கொடை விழா என்றழைக்கப்படுகிறது.

குலசை கோவிலில் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் இரவில் முளைப்பாலிகைகளில் நவதானியங்களைத் தெளித்து - அவ்வப்போது நீர்தெளித்துப் பூசை செய்து - எட்டாம் நாளில் அதாவது மூன்றாம் செவ்வாய் இரவில் முளைப்பாலிகையினை மகாமண்டபத்தில் கொண்டு வைத்து அலங்காரம் செய்து சிறப்புப் பூசை செய்யப்படுகிறது.

எடுத்த கருமம் இனிது நிறைவேறவும், நாடும் வீடும் செழிக்கவும் இவ்விழா நடத்தப்படுகிறது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய் நடைபெறுகிறது. இவ்விழா திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருநாளில் அம்பாள் திருமுகத்தைக் குடத்து நீரில் அமர்த்தி, வேப்பிலை மற்றும் பூக்களால் அலங்கரித்து மூன்றுமுறை கும்பம் திருவீதி எழுந்தருளிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர்க் கும்பம் திருக்கோயில் சென்றடைகிறது. திங்கள் இரவில் மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்கும் இக்கொடைவிழா புதன் மாலையில் மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெறுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடிக்கொடை விழா
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» ஐய‌ப்ப‌ன் கோ‌யி‌ல் ஆறா‌ட்டு ‌விழா
»  28 நாள் விழா
» இசைப்புயலின் இசை விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum