மீண்டும் அண்ணன் இயக்கத்தில் தம்பி...!
Page 1 of 1
மீண்டும் அண்ணன் இயக்கத்தில் தம்பி...!
ஜெயம் படத்தின் மூலம் அண்ணன் ராஜா இயக்குனராகவும், தம்பி ரவி ஹீரோவாகவும் ஒன்றாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இந்தப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் பெயரை தங்களது பெயருக்கு முன்னால் இணைத்து கொண்டு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி என்று வலம் வர ஆரம்பித்தார்கள். தொடர்ந்து அண்ணன் இயக்கத்தில், தம்பி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்கள் ஹிட்டாக அண்ணன் முன்னணி இயக்குநராகவும், தம்பி முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்தனர். கடைசியாக இருவரும் தில்லாலங்கடி படத்தில் இணைந்தனர். இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இருவருக்குமான நல்ல பெயரை தக்க வைத்து கொண்டது.
இந்நிலையில் அண்ணன், தம்பி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து டைரக்டர் ராஜா கூறுகையில், இது ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆக்ஷ்ன் படத்தை யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆக்ஷ்ன் படங்கள் வரிசையில் இந்தப்படமும் இடம்பெறும், அதேசமயம் குடும்ப உறவுகளையும் சொல்லும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அண்ணன் தயாரிப்பில் தம்பி
» தமிழுக்கு தம்பி இந்திக்கு அண்ணன் !
» அண்ணன் இயக்கும் படத்திற்கு தம்பி தயாரிப்பாளர்
» கும்கி ஆடியோ விழா - அண்ணன் கமலும் தம்பி ரஜினியும்
» அண்ணன் இயக்கத்தில் ஆதி
» தமிழுக்கு தம்பி இந்திக்கு அண்ணன் !
» அண்ணன் இயக்கும் படத்திற்கு தம்பி தயாரிப்பாளர்
» கும்கி ஆடியோ விழா - அண்ணன் கமலும் தம்பி ரஜினியும்
» அண்ணன் இயக்கத்தில் ஆதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum