‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை
Page 1 of 1

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “கோச்சடையான்“. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மினி ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் 19 ஆம் தேதியன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் துவங்கி 25 நாட்கள் நடைபெற்றது. பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து அத்துடன் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்தது. கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து இன்று காலை “கோச்சடையான்” முழுப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கதாசிரியர் கே.எஸ்.ரவிக்குமார் பார்த்து ஆய்வு செய்தனர். இதில் இருவருக்கும் முழு திருப்தி ஏற்பட்டது.
இதுபற்றி கோச்சடையான் கதாசிரியரான கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், “நான் நினைத்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது” என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறும்போது “என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும். மிக பிரமாதமாக வந்திருக்கிறது” என்று தன் மகளும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யாவை வெகுவாக பாராட்டினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம், ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங் , ரீரிக்கார்டிங் , ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஆகிய பணிகளை மார்ச் மாதம் 15-ஆம் தேதி துவங்கி ஒரே நேரத்தில் மூன்று பிரிவுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை
» கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்
» ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» அடுத்த மாதம் கோச்சடையான் படத்தில் நடிப்பேன் – ரஜினிகாந்த் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum