கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
Page 1 of 1
கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
ரஜினிகாந்த் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா இயக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வையில், பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் படம், ‘கோச்சடையான்.’ ஹாலிவுட்டில் தயாரான ‘அவதார்,’ ‘டின்டின்’ படங்களைப்போல் புதிய தொழில்நுட்பத்தில், இந்த படம் தயாராகியிருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்தது
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த படப்பிடிப்பு தொடங்கியது. ஐதராபாத்தில், மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சில முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன.
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் தற்போது நடைபெறுகின்றன.
‘டப்பிங்’ பேசினார்
‘டப்பிங்’ பணிகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் பிரசாத் 70 எம்.எம். தியேட்டருக்கு வந்து, ‘டப்பிங்’ பேசினார். தொடர்ந்து, ‘டப்பிங்’ பணிகள் நடைபெறுகின்றன.
4 மொழிகளில்...
‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது.
ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், தீபிகா படுகோனே, ஷோபனா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். வருகிற ஜூலை மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
39 வருடங்கள்
ரஜினிகாந்தின் சொந்த பெயர், சிவாஜிராவ். அவர், ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 39 வருடங்கள் ஆகின்றன. 39–வது வருடத்தில், ‘கோச்சடையான்’ படம் திரைக்கு வர இருக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசினார் சூர்யா
» கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்
» அடுத்த மாதம் கோச்சடையான் படத்தில் நடிப்பேன் – ரஜினிகாந்த் பேட்டி
» ‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை
» முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசினார் சூர்யா
» கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்
» அடுத்த மாதம் கோச்சடையான் படத்தில் நடிப்பேன் – ரஜினிகாந்த் பேட்டி
» ‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum