தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்தின் படகு சாகசம்!

Go down

அஜித்தின் படகு சாகசம்! Empty அஜித்தின் படகு சாகசம்!

Post  ishwarya Sat May 25, 2013 2:05 pm

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்பதாத படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காரிலிருந்து வேறொரு காருக்கு அஜித் தாவுவது போல் வெளியான வீடியோ ரசிகர்களை ஆச்சர்யக்கடலில் மூழ்கடித்துவிட்டது.

கார் சாகசக் காட்சியை படமாக்கிய போது ஏற்பட்ட விபத்தில் முறிந்த அஜித்தின் கால்கள், இப்போது தான் குணமாகியுள்ளன அதற்குள் அஜித், விஷ்ணுவர்தன் படத்திற்ககாக அடுத்த சாகசக் காட்சியில் நடித்துள்ளார். அஜித் வில்லனை படகில் துரத்திக்கொண்டு செல்வது போன்ற காட்சியில் தான் அஜித் படகில் பல சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறாராம்.

புகழ்பெற்ற சண்டை பயிற்சி நிபுணர் ’லீ விட்டேகர்’யின் மேற்பார்வையில் படமாக்கப்பட்ட இந்த காட்சியப் பற்றி அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் “ அஜித்தின் திறமை அபாரமானது. அஜித் இல்லாமல் அந்தக் காட்சியை அவ்வளவு அற்புதமாக எடுத்திருக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.

அடுத்தடுத்து வெளிவரும் அஜித் நடிக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் ஆச்சர்யத்தையும் ஆவலையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. கடைசி கட்ட படப்பிடிப்பில் அஜித்-விஷ்ணுவர்தன் திரைப்படம் படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum