தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவிழ்ந்த படகு, தப்பிய தனுஷ்

Go down

கவிழ்ந்த படகு, தப்பிய தனுஷ் Empty கவிழ்ந்த படகு, தப்பிய தனுஷ்

Post  ishwarya Wed Mar 27, 2013 6:09 pm

இயக்குனர்களுக்கு ஏன் இந்த திடீர் கடல் பாசம் தெ‌ரியவில்லை. சீனு ராமசாமியின் நீர்ப்பறவை, மணிரத்னத்தின் கடல், பிஜாய் நம்பியா‌ரின் டேவிட்… மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை கடல். இதோடு இந்த கடல் மேனியா தீரும் போலத் தெ‌ரியவில்லை.

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ம‌ரியான் படமும் கடலை மையப்படுத்தியது. தனுஷ் இதில் மீனவராக வருகிறாராம்.

கன்னியாகும‌ரி மாவட்டம் குளச்சலில் ம‌ரியானின் படப்பிடிப்பு நடந்தது. கடலுக்குள் சில காட்சிகளை படமாக்கினார் பரத்பாலா. இதில் தனுஷ், அப்புக்குட்டி அமர்ந்திருந்த படகு திடீர் காற்றில் தலைகீழாக கவிழ்ந்தது. உடனடியாக பாதுகாப்புக்குச் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து இருவரையும் காப்பாற்றினார்கள்.

இந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது.

ம‌ரியானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுவே முதல்முறை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum