ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
Page 1 of 1
ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
ஐ படத்தைக் குறித்த சில தவறான செய்திகளை விளக்கியிருக்கிறார் ஷங்கர். முதலாவதாக ஐ படத்தின் பட்ஜெட் நூறு கோடிக்கும் குறைவுதான். ஆனால் படத்தின் பட்ஜெட் 150 கோடியை தொடப்போகிறது என செய்திகள் வெளியாயின. முன்பு சொன்னது போல் நூறு கோடிக்கும் குறைவுதான் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இன்னொன்று சைனாவில் எடுக்க முடியாமல் போன காட்சிகளை கொடைக்கானலில் சைனா போன்று செட் போட்டு எடுத்ததாக வந்த செய்தி. இதனையும் ஷங்கர் மறுத்திருக்கிறார்.
விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடித்துவரும் இந்தப் படத்தின் மூன்றில் இரண்டு பகுதி படமாக்கப்பட்டுவிட்டன. இதில் நான்கு பாடல் காட்சிகள், மூன்று ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வசனப்பகுதிகள் அடக்கம். இதுவரை சைனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானால் பொள்ளாச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முக்கியமான விஷயம் மேக்கப்புக்காக இவர்கள் கைகோர்த்திருக்கும் கம்பெனி. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரிஸின் மூலம் ரசிகர்களை மட்டுமின்றி ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற ஜாம்பவான்களையும் டெக்னிக்கலாக மிரட்டிய பீட்டர் ஜாக்சனின் வீட்டா வொர்க் ஷாப்புடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் படத்தின் முக்கியமான மேக்கப் பகுதிகளை வடிவமைக்கயிருக்கிறார்கள்.
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்துக்குப் பிறகே டின்டின் படத்தை எந்த டெக்னாலஜியில் எடுப்பது என்ற முடிவை தான் எடுத்ததாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே தெரிவித்திருக்கிறார். கேமரூனின் அவதார் படமும் வீட்டாவின் கைவண்ணத்திலே உருவானதுதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்
» வழக்கு எண் படம் குறித்து விவாதம்
» ‘பெட்டிங்’ குறித்து படம் எடுக்கும் ‘ரோஸ்’ வெங்கடேசன்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
» குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்? ஐஸ்வர்யாராய் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum