வழக்கு எண் படம் குறித்து விவாதம்
Page 1 of 1
வழக்கு எண் படம் குறித்து விவாதம்
வழக்கு எண் 18/9 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், இயக்குநர்கள் பாலு மகேந்திரா, பாக்யராஜ், அமீர், ஜனநாதன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி, சமுத்ரக்கனி, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பாக்யராஜ், இந்த படத்திற்கு சென்சார் போர்ட் எவ்வாறு யு/ஏ சான்றிதழ் கொடுத்தது என்று தெரியவில்லை. இதுபோன்ற படங்களுக்கு யு சான்றிதழ் அளித்து வரி விலக்குக்கு உதவ வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
யு/ஏ சான்றிதழ் அளித்த சென்சார்போர்டிடம், படத்தின் தயாரிப்பு வட்டம் கேள்வி கேட்டிருக்க வேண்டும். இனிமேல் எந்த காட்சிக்காக யு சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்பதை சென்சார் போர்டு குறிப்புத் தர வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிமாணத்தை அளிப்பதில் பாலாஜி சக்திவேலுக்கு இணை அவரேதான். அந்த வகையில் அவர் தயாரித்து வெளியாகியுள்ள வழக்கு எண் 18/9 படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
» ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
» தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்
» ‘பெட்டிங்’ குறித்து படம் எடுக்கும் ‘ரோஸ்’ வெங்கடேசன்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
» ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
» தலைவா படம் குறித்து விஜய் விளக்கம்
» ‘பெட்டிங்’ குறித்து படம் எடுக்கும் ‘ரோஸ்’ வெங்கடேசன்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum