தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் பாலா, சசிகுமாரை பார்த்து மர்ம புன்னகை! விக்ரம் பிரபுவுக்கு இருக்கு விரல் விளையாட்டு!

Go down

டைரக்டர் பாலா, சசிகுமாரை பார்த்து மர்ம புன்னகை! விக்ரம் பிரபுவுக்கு இருக்கு விரல் விளையாட்டு! Empty டைரக்டர் பாலா, சசிகுமாரை பார்த்து மர்ம புன்னகை! விக்ரம் பிரபுவுக்கு இருக்கு விரல் விளையாட்டு!

Post  ishwarya Sat May 25, 2013 12:06 pm

பாலா படத்துக்கு ஒரு (பாவப்பட்ட) ஹீரோ பிக்ஸ் ஆகிவிட்டார் என்றால், எடுத்த எடுப்பிலேயே கத்தியை ‘தலையில்’ வைப்பதுதான் பாலாவின் ஸ்டைல்! தன் பட ஹீரோக்களுக்கு அவர் செய்யும் முதல் வேலை, அழகான கிராப்பை சுண்டெலியை விட்டு சுரண்ட விடுவது.

கடைசியாக ஒரு முறை கண்ணாடியை பார்த்து, “இனி ரெண்டு வருஷத்துக்கு சீப்புக்கு வேலையே இல்லே…” என்று கண்ணீரோடுதான் கிளம்புவார்கள் பாலாவின் படப்பிடிப்புக்கு. தலை முடி வளர 2 வருடம் ஆகாதுதான்.. ஆனால் பாலா படம் எடுத்து முடிய 2 வருடங்கள் ஆகிவிடும்.

அதுவரை சுண்டெலி அரித்த தலையுடன் திரிவது, ஹீரோவின் விதி. இப்படி அடுத்தவர் மண்டையில் ‘கத்தி’ கச்சேரி நடத்தும் பாலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சசிகுமார்.

பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இந்த நிமிடம் வரைக்கும் ஒப்பந்தத்தில் இருப்பவர் அவரது சிஷ்யன் சசிகுமார்தான். (இது மாறுவதும் மாறாததும் பாலாவின் மூடை பொறுத்த விஷயம்)

பாலா தன் படத்தில் நடிக்க அழைத்தவுடன் சசிகுமார் போட்ட நிபந்தனையே இதுதானாம். “அண்ணே… நீங்க என் தெய்வம். அது வேற. ஆனா இப்பதான் ஏழு கோடி சம்பளம் வாங்குற லெவல் ஹீரோவா ஆகியிருக்கேன்.

இந்த நேரத்தில் தலைமுடிய சுரண்டுகிறேன், தாடிய நறுக்குறேன், ஒரு காதை அறுக்கிறேன்னு என் கெட்டப்பை மாத்திராதீங்க. அப்படியே படத்தையும் சீக்கிரம் முடிச்சுருங்க. ரெண்டு வருஷத்துக்கு படத்தை சவ்வா இழுப்பீங்கன்னா என்னைய இப்பவே விட்ருங்க” என்றாராம் கண்ணீரும் கம்பலையுமாக!

இந்த கோரிக்கையை ஒரு சிறு புன்னகையோடு பாலா ஏற்றுக் கொண்டதாக தகவல்.

இந்த புன்னகைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள், பாலாவை நன்கு அறிந்தவர்கள்.

அது என்னவென்றால், படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் விக்ரம் பிரபு.

மவனே.. எல்லாமே ரெண்டு ரெண்டாக இவரது தலையில் விழப் போகிறது! மொக்கை பிளேடுகூட பயன்படுத்தாமல், முடியை புடுங்கியே எடுக்கும் திட்டம் இருக்கிறதாம்!!

விக்ரம் பிரபு விதி ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு தெம்பா வருதே, என்ன பண்ண?


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum