நான் சொல்றதில் என்ன தப்பு? மிரட்டலுக்கு நியாயம் கேட்கும் பிரகாஷ்ராஜ்.
Page 1 of 1

பிரகாஷ்ராஜ் புரொடக்சன் தயாரித்திருக்கும் கௌரவம் சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகளை மையப்படுத்தியது. ஆஹா... நம்ம மடியிலேயே கை வைக்கிறாங்க என்று உஷாரான சில சாதி காட்சிகள் பிரகாஷ்ராஜுக்கும், ராதாமோகனுக்கும் மிரட்டில்விட ஆரம்பித்தன. தங்களின் சாதி பவிசு வெளியே தெரிந்துவிடுமோ என்ற உதறல்.
இப்படியொரு சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பிரகாஷ்ராஜ். கௌரவம் பிரச்சனைதான் பேசுபொருள்.
"கௌரவம் ஒரு சமூகத்தை சார்ந்த கதையல்ல என்று தீர்மானமாக பேச ஆரம்பித்தார். இது உலகமெங்கும் நடக்கிற கதைதான். தினமும் செய்தித்தாள்களில் இதை படிக்கிறோம். இதுவொரு சமூகப் பிரச்சனை.
அதை கன்னடக்காரன் நீ ஏன் சொல்றே என்று கேட்கிறாங்க. நான் சொல்லாமல் வேற யார் சொல்வார்? ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லை, உனக்கு மட்டும் அந்த உரிமை எங்கிருந்து வந்ததுன்னு கேட்கிறேன். இப்படி நான் சொல்றதில் என்ன தவறு இருக்கிறது?
கௌரவத்தை எடுக்க ஒரு படைப்பாளிக்கு உரிமை இருக்கு. இது நாட்டுக்காக எடுத்தப் படம். சாதி, மதத்தின் பெயரால் நடக்கிற வன்முறைக்கு எதிரான படம். என்ன மிரட்டல் வந்தாலும் இது மாதிரி படத்தை தொடர்ந்து எடுப்பேன்."
ராதாமோகனின் கௌரவம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியிருக்கிறது. அல்லு சிரிஷ் ஹீரோ, யாமி கௌதம் ஹீரோயின். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து, இது தங்கள் சாதிக்கு எதிரான படமாக இருக்குமோ என கோயம்புத்தூர் பக்கம் செல்வாக்காக இருக்கும் சாதி கட்சி ஒன்று பிரச்சனையை கிளப்பியது.
அரசு இந்த முறையாவது சட்டம் ஒழுங்கு கெடும் என கௌரவத்தை தடை செய்யாமல் தடை கோருகிறவர்களை தடுக்க முன்வர வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு?: பியா
» டயட்-ல இருக்கும் போது பண்ற தப்பு என்ன தெரியுமா?
» நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!
» நான் என்ன சொன்னேன்னா..?
» நான் என்ன செய்யட்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum