அஞ்சலி போலீசில் ஆஜாராக முடிவு.
Page 1 of 1
அஞ்சலி போலீசில் ஆஜாராக முடிவு.
தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜராக முடிவு செய்துள்ளார். இதற்கிடையில், அவர் மீது டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சித்தி பாரதி தேவியும் டைரக்டர் களஞ்சியமும் தன்னை டார்ச்சர் செய்கின்றனர் என்று நடிகை அஞ்சலி 2 நாள் முன்பு கூறினார். இந்நிலையில், அவர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்தார். ‘3 வயதில் இருந்து அஞ்சலியை வளர்க்கிறேன். 2003-ல் சட்டப்படி தத்தெடுத்தேன். இயக்குனர் களஞ்சியம்தான் பாலா திரிபுரசுந்தரி என்ற பெயரை அஞ்சலி என்று மாற்றி சினிமாவில் அறிமுகம் செய்தார்.
கடந்த மார்ச் 31-ம் தேதி பலுப்பு என்ற தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக என் கணவர் சூரியபாபுடன் ஐதராபாத் சென்றிருந்த அஞ்சலி மாயமாகிவிட்டார். சட்டவிரோதமாக யார் பிடியிலோ சிக்கியுள்ள அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 2 வாரத்தில் போலீஸ் கமிஷனர், வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், தனது அண்ணன் ரவிசங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ரவிகிஷோர் ஆகியோரிடம் போனில் பேசிய அஞ்சலி தான் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் மீடியாவை சந்திப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியானது. ஐதராபாத் போலீசில் அஞ்சலி ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சைதாப்பேட்டை கோர்ட்டில் அஞ்சலி மீது களஞ்சியம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர்
» சென்னை திரும்புகிறார் நடிகை அஞ்சலி: போலீசில் விரைவில் ஆஜர்
» ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum