சென்னை திரும்புகிறார் நடிகை அஞ்சலி: போலீசில் விரைவில் ஆஜர்
Page 1 of 1

நடிகை அஞ்சலி கடந்த 8-ந்தேதி திடீரென்று மாயமானார். சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் நிருபர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். சித்தி பாரதிதேவி இக்குற்றச்சாட்டை மறுத்தார்.
அஞ்சலியை யாரோ கடத்தி வைத்து தனக்கு எதிராக பேசவைப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அஞ்சலியை தேடி கண்டுபிடிக்கும்படியும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபோல் அஞ்சலியின் அண்ணனும் ஐதராபாத் போலீசில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் செய்தார். சென்னை மற்றும் ஆந்திர போலீசார் அவரை தேடினர்.
இதையடுத்து ஐதராபாத் போலீசில் திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்த வில்லை என்று வாக்குமூலம் அளித்தார். மன உளைச்சலால் மும்பையில் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்று இருந்ததாக கூறினார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க துவங்கியுள்ளார்.
தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக ‘பலுபு’ படத்திலும் இந்தியில் இருந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘போல்பச்சன்’ படத்திலும் நடிக்கிறார். இதில் வெங்கடேஷ் ஜோடியாக வருகிறார். ‘போல்பச்சன்’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடந்து வருகிறது. இப்படத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்காக புனேயிலேயே தங்கியுள்ளார்.
ஏற்கனவே ‘மதகஜராஜா’ தமிழ்படத்தில் விஷாலுடன் அஞ்சலி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சூர்யாவின் ‘சிங்கம்-2’ படத்தில் கவுரவ வேடத்தில் ஓரிரு சீன்களில் தோன்றுகிறார்.
டைரக்டர் களஞ்சியம் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ‘ஊர்சுற்றி புராணம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக 10 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்குகிறது. இதில் அஞ்சலி பங்கேற்று நடிக்க வேண்டும் என்றும் வர தவறினால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிப்பேன் என்றும் களஞ்சியம் கூறியுள்ளார்.
இப்படத்தில் அவர் நடிக்க மறுத்தால் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டிய கட்டாயம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்படத்தில் நடிப்பதற்காக அவர் சென்னை வருவார் என கூறப்படுகிறது. அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகிறார்.
சித்தி பாரதி தேவியின் கடத்தல் புகார் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதுபோல் இயக்குனர் களஞ்சியமும் அவதூறு புகார் அளித்துள்ளார். நேரில் ஆஜராகும் போது இவ்விரு புகார்கள் மீது அஞ்சலியை போலீசார் விசாரிக்க உள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? தலைமறைவாக இருந்த இடம் எது? யாரேனும் கடத்த முயன்றார்களா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் கேட்டு அஞ்சலி பதிலை பதிவு செய்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டில் அஞ்சலி மீது ஹேபியஸ் கார்பிஸ் வழக்கு உள்ளது. அஞ்சலி விளக்கம் அடிப்படையில் போலீசார் அவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர்
» தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர் பரபரப்பு தகவல்கள்.
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum