தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினி.

Go down

கோச்சடையான் படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினி. Empty கோச்சடையான் படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினி.

Post  ishwarya Fri May 24, 2013 6:26 pm

கோச்சடையான்‘ படத்தில் தந்தை- மகன் என இரு வேடத்தில் ரஜினி நடிப்பதாக கூறினார் இயக்குனர் சவுந்தர்யா. ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இதன் ஷூட்டிங் நடந்து முடிந்தது. 3டியில் புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. கடந்தவாரம் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்ற ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளின் முதல்பாதிவரையான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்தார். வரும் மே மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை கேன்ஸ் பட விழா நடக்க உள்ளது. அந்த விழாவில் ‘கோச்சடையான்‘ படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது.

ரஜினிகாந்த் நேரில் கலந்துகொண்டு டிரைலரை வெளியிடுகிறார். இதே விழாவில் அமிதாப்பச்சன் நடிக்கும் ‘தி கிரேட் கேட்ஸ்பை‘ என்ற ஹாலிவுட் படத்தின் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி அமிதாப்பும் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளார். கோச்சடையான் பற்றி சவுந்தர்யா கூறும்போது,‘நேர்மையும், தெய்வீக குணம் கொண்ட கோச்சடையான் என்ற தந்தை வேடம், ராணா என்ற மகன் வேடம் என இரட்டை வேடத்தில் ரஜினி நடிக்கிறார். தந்தை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஷோபனா, மகன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர். இப்படம் அப்பாவின் வழக்கமான பார்முலாவை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum