தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்துடன் ஜோடி சேரத்துடிக்கும் ஸ்ரீதேவி!

Go down

அஜீத்துடன் ஜோடி சேரத்துடிக்கும் ஸ்ரீதேவி! Empty அஜீத்துடன் ஜோடி சேரத்துடிக்கும் ஸ்ரீதேவி!

Post  ishwarya Fri May 24, 2013 6:22 pm

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஸ்ரீதேவி நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரானது. இப்படத்தில் அஜீத்தும் ஒரு சிறிய வேடத்தில் நட்புக்காக நடித்திருந்தார்.

அதோடு, மும்பை சென்று நடித்துக்கொடுத்தவர், அதற்கான சன்மானம் வாங்க மறுத்து விட்டாராம். இதனால் அப்படக்குழுவினர் மட்டுமின்றி, ஸ்ரீதேவிக்கும் அஜீத் மீது மிக நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியிடம், மீண்டும் தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளீர்கள்? என்று கேட்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் அஜீத்துடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பதில் அளித்துள்ளார். காரணம், அஜீத் ரொம்ப இனிமையான மனிதர். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum