தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது கமல் - ஸ்ரீதேவி ஜோடி

Go down

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது கமல் - ஸ்ரீதேவி ஜோடி Empty 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது கமல் - ஸ்ரீதேவி ஜோடி

Post  ishwarya Fri Mar 22, 2013 5:03 pm



ஸ்ரீதேவியுடன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

1970-80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர், ரஜினி, கமல் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்-ஸ்ரீதேவி ஜோடி பெரிதும் பேசப்பட்டன. இருவரும் இணைந்த நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர்களது நடிப்பில் மூன்றாம் பிறை எனும் திரைப்படம் வெளியானது.

அதனைத்தொடந்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடிபெயர்ந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் தன்னுடைய மறுபிரவேசத்தை தொடங்கினார் ஸ்ரீதேவி.

இதனைதொடந்து கமல்-ஸ்ரீதேவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்தப் படம் மூன்றாம் பிறை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல்கள் வெளியாயின. தற்போது அந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை கமல் ஹாசன் உறுதிசெய்துள்ளார்.

அண்மையில் கமல் ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். இதற்கான கதையை நானே எழுதி தயார் செய்து வருகிறேன். இந்த கதை ஸ்ரீதேவிக்கு பொருத்தமானதாக இருக்கும். முழு விவரம் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் இது குறித்து கமல் ஸ்ரீதேவியிடம் பேசியதாகவும் கதை பிடித்துபோய் அவர் நடிக்க சம்மதம் தெவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே கமல்-ஸ்ரீதேவி மீண்டும் இணையும் திரைப்படம் மூன்றாம் பிறை திரைப்படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு புதிய படமா என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும். அதுவரை காத்திருக்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum