தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் அம்மா என்னை கவனித்தாலே எனக்கு நடிப்பு வராது- கார்த்திகா

Go down

என் அம்மா என்னை கவனித்தாலே எனக்கு நடிப்பு வராது- கார்த்திகா Empty என் அம்மா என்னை கவனித்தாலே எனக்கு நடிப்பு வராது- கார்த்திகா

Post  ishwarya Fri May 24, 2013 6:17 pm

கோ படம்தான் கார்த்திகாவுக்கு தமிழில் முதல் படம். ஆனால் இந்த படத்தில் நடித்தபோதுகூட படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லவில்லையாம் அவரது தாய்குலம் ராதா. அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்தபோதுகூட, கதை கேட்டதோடு சரியாம். மகள் எப்படி நடிக்கிறார் என்பதை வேடிக்கை பார்க்கக்கூட செல்லவில்லையாம் அவர்.

பெரும்பாலும், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளைவிட அவர்களின் தாய்குலங்கள் செய்யும் அலம்பல்தான் ஜாஸ்தியாக இருக்கும். ஆனால் இங்கே தாய்குலம் ஒரு நடிகையாக இருந்தும் ஸ்பாட்டில் தலைகாட்டுவதே இல்லையே என்ன காரணம்? என்று கார்த்திகாவிடம் கேட்டால், என் அம்மாவுக்கு சினிமா தெரியும். நடிப்பில் இருக்கும் பிரச்னைகளை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், விலகியே நிற்கிறார். காரணம், நான் நடிக்கும்போது மற்றவர்கள் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தால் அது என் மனதை பாதிக்காது. ஆனால் என் அம்மா என்னை கவனிப்பது போல் நான் உணர்ந்தாலே நடிப்பு வராது. குறிப்பாக காதல் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

இது ஒரு நடிகையாய் என் அம்மாவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கே அவர் வருவதில்லை. மீறி வந்தாலும், நான் நடித்துக்கொண்டிருக்கிற ஏரியா பக்கமே தலைகாட்ட மாட்டார் என்று சொல்கிறார் கார்த்திகா.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் தாய் ராதாவைப்போல் நடிப்பு வரவில்லை என்று விமர்சிப்பதா?-கார்த்திகா வருத்தம்
» அம்மா டயட்ல இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வராது!
» கிளாமர் எனக்கு சரிப்பட்டு வராது – ‘மீனாட்சி’ ஸ்ரீஜா
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
»  இனி நடிப்பு மட்டும்தான்: கோமல் சர்மா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum