அம்மா டயட்ல இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வராது!
Page 1 of 1

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று ஆரோக்கியத்துக்கான தேசிய மையத்தின் ஆலோசனைப் பிரசுரம் ஒன்று தெரிவித்திருந்தது. பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே உடல் எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இதில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாடுகள் உடல் எடையை மூலம் கட்டுக்குள் வைத்தால், இவ்விதமான பிரச்சினைகளைத் தவிர்க்க அது உதவுகிறதே ஒழிய வயிற்றிலுள்ள குழந்தையுடைய ஆரோக்கியத்தையோ தாயுடைய ஆரோக்கியத்தையோ அது பாதிக்கவில்லை என புதிய ஆய்வு தெளிவுபடுத்துகிறது
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதாலும், தனக்கும் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகமாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் கர்ப்பிணிப் பெண்கள் அளவுக்கதிகமாக உடல் எடை அதிகரிக்கின்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்றும், மகப்பேறு தொடர்பாக ஏற்படக்கூடிய சில சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்றும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது.
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்துவிடுகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் தமது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுவதாக தப்பாகப் புரிந்துகொள்ளக்கூடாது என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக உடல் எடை கூடிப்போனால், நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய், தாயின் உடலில் உப்புசத்து கூடிப்போய்விடுவது, முன்கூட்டியே பிரசவம் ஆகிவிடுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏழாயிரம் கர்ப்பிணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த 44 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முன்பு செய்யப்பட்ட 44 ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றாக ஆராய்ந்து இந்த முடிவு தெரிவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடும் உணவிற்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வீசிங் பிரச்சினை ஏற்படுவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். நாளடைவில் அதுவே ஆஸ்துமாவாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கு கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுதான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் வீசிங் பிரச்சினைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் அம்மா என்னை கவனித்தாலே எனக்கு நடிப்பு வராது- கார்த்திகா
» குண்டு அப்பாவா? குழந்தைக்கு பாதிப்பு வருமாம்!
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum