தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு.

Go down

ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு. Empty ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு.

Post  ishwarya Fri May 24, 2013 6:03 pm

நடிகை அஞ்சலி கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி பரபரப்பு ஏற்படுத்தினார். சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகளும் கூறினார். அஞ்சலியை கண்டுபிடிக்கும்படி சென்னை மற்றும் ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரை யாரேனும் கடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக பாரதிதேவி போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து அஞ்சலி ஐதராபாத் போலீசாரிடம் திடீரென ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையில் சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடுமாறு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதன்மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நேற்று மாலை நீதிபதிகள் கே.என்.பாஷா, தேவதாஸ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாரதிதேவி சார்பில் வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆஜரானார். அஞ்சலி போலீசாரிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதன் காரணமாக இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜூன் மாதத்துக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
» செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
»  செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum