தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு

Go down

 செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு  Empty செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு

Post  amma Thu Apr 04, 2013 4:35 pm



செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது60). ரிக் அதிபர். இவருக்கும், நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கும் பழக்கம் இருந்து வந்தது.

கடந்த 2008–ம் ஆண்டு நடிகர் சீனிவாசன், ரிக் அதிபர் பொன்னுசாமியிடம் ரூ.2 லட்சம் வாங்கினார். இதற்காக 2009–ம் ஆண்டு ‘செக்’ கொடுத்தார். நடிகர் சீனிவாசனின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் அந்த ‘செக்’ திருப்பி வந்தது.

இதையொட்டி செக்மோசடி செய்ததாக பொன்னுசாமியின் மேலாளர் வெங்கடாசலம், நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய மாஜிஸ்திரேட்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளியே வரும் வகையிலான பிடிவாரண்டை பிறப்பித்தார். இருந்தபோதிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

பிடிவாரண்டு

இந்த நிலையில், இதுதொடர்பான மனு தற்போது 3–வது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: மதுரை கோர்ட்டு உத்தரவு
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு.
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum