தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!

Go down

 சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! Empty சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!

Post  ishwarya Fri May 24, 2013 5:12 pm

சித்தார்த்-சமந்தா காதல் விவகாரம் கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்த கதையாகி விட்டபோதும், இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் மறுத்து வருகிறார்கள் அவர்கள். மேலும், இந்த அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்தபோதிலும், அவர்கள் இருவரும் ரொம்ப கேசுவலாக இருக்கிறார்கள். அடிக்கடி ஐதராபாத் ஒட்டல்களில் சந்தித்துக்கொள்வது. தாங்கள் நடித்த படங்களின் ரஷ் பார்க்க அழைப்பது என்று மீட்டிங் போட்டுதான் வருகிறார்கள்.

இந்த நிலையில், சித்தார்த் தமிழில் நடித்துள்ள தீயா வேலை செய்யனும் குமாரு படம் தெலுங்கிலும் ரிலீசாகிறது. தற்போது சமந்தாவின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், அவரையும் இப்படத்தில் இணைத்தால் படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்த சித்தார்த், அப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சமந்தாவிடம் கேட்டாராம். அதற்கு, மறுபேச்சின்றி சம்மதம் சொன்ன சமந்தா, விரைவில் அப்படத்தில் நடிக்கிறாராம்.

ஆனால், ஹன்சிகாவோ, ஓரிரு சீன்களில் சமந்தா வந்தாலும், அது முக்கிய காட்சிகளாக இருந்தால், நாம் படம் முழுக்க நடித்தும டம்மியாகிவிடுவோமோ என்று உள்ளூர அச்சத்தில் இருந்து வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum