தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!!

Go down

தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! Empty தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!!

Post  ishwarya Fri May 24, 2013 5:03 pm

சினிமாவுக்கு நிகர் எதுவும் இல்லை. காதலி, காதலன் தோளில் சாய்ந்து கண்ணை மூடி திறந்தாலே அமெரிக்கா, சுவிட்சர்லாந்தை காட்டுவார்கள். அதில் கமலும் விதிவிலக்கல்ல. மெகா ஹிட் வெற்றி படமான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார் கமல். குறிப்பாக, இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும என்பதால், காட்சிகளை இன்னும் பிரமாண்டமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கி வருகிறார்.

முதல் பாகத்தில் ஆப்கானிஸ்தான், அமெரிக்க போன்ற பகுதிகளில் நடந்த கதை, 2வது பாகத்தில் இந்தியாவில் நடக்கிறது. அதனால் இந்தியாவில் சில பகுதிகளில் படமாக்கினபோதும், அடுத்து இந்தியாவில் நடப்பது போன்ற காட்சிகளை தாய்லாந்த் நாட்டில் படமாக்குகிறாராம் கமல். தவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

மேலும், விஸ்வரூபம் 100வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருப்பதால் முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கும் கமல், இரண்டாம் பாகத்தையும் 100 நாட்கள் ஓட வைத்து விட வேண்டும் என்றும் மெனக்கெட்டு வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum