தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது
Page 1 of 1

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் நேற்று இறுதிக்கட்ட ஆய்வை முடித்தனர். ஆய்வு தொடர்பான அறிக்கையை இன்று பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்கின்றனர். தூத்துக்குடியில் மார்ச் 23ம் தேதி காற்றில் பரவிய நச்சுவாயு காரணமாக பொது மக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், கண், தொண்டை எரிச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சு புகை தான் இதற்கு காரணம் எனக்கூறி ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய் தலைமையில், பேராசிரியை லிஜி பிலிப், ஸ்டெர்லைட் ஆலை அதிகாரி சுமதி, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி மோகன் நாயுடு ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு நேற்று 3ம் கட்டமாக இயந்திரங்களை முழுமை யாக இயங்கச்செய்து ஆய்வு செய்து பின்னர் சென்னை புறப்பட்டு சென்றனர். இன்று தங்களது ஆய்வு அறிக்கையை பசுமை தீர்ப்பாய்த்தில் அளிக்கிறது. இதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு

» ‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum