தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
Page 1 of 1

இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் சேவைபுரிந்த ‘வீரா’ கப்பலுக்கு
இன்று பிரியாவிடை கொடுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக புதிதாக ‘வைபவ்’ என்ற
கப்பல் 21ம் தேதி இணைக்கப்படுகிறது. இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான
கப்பல் ‘வீரா’ கடந்த 30,6,1984ல் கட்டப்பட்டது. கடலோர காவல் படையில்
இணைக்கப்பட்டு கடந்த 3,5,1986 முதல் பணியாற்றி வருகிறது. தொடர்ந்து 28
ஆண்டுகள் கடலோர காவல் படையில் பணியாற்றியுள்ளது. இந்த கப்பல் ஆயுட்காலமான
25 ஆண்டுகளை தாண்டியும் இயங்கி வருகிறது.
இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது தளத்தில்
நிறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து பீரங்கிகள், துப்பாக்கிகள், தொலை தொடர்பு
மற்றும் ரேடார், சோலார் உள்ளிட்ட கருவிகளை அகற்றிவிட்டு ஏலம்
விடப்படுகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு இன்று
(20ம் தேதி) மாலை தூத்துக்குடி துறைமுகத்தில் கடலோர காவல்படை வைஸ் அட்மிரல்
டப்ளியர்ஸ் தலைமையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கு பதிலாக கடலோர காவல் படையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ‘வைபவ்’ என்ற
புதிய போர்க்கப்பல் இணைக்கப்படுகிறது. வீராவை விடவும் சற்றே பெரிய கப்பலான
‘வைபவ்’ கடந்த மார்ச் 31ம் தேதியன்று கோவாவில் இந்திய கடலோர காவல் படையில்
இணைக்கப்பட்டது.
இந்த கப்பல் 94 மீட்டர் நீளம் கொண்டது, அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்ப
கருவிகளுடன் கூடிய வசதியான ஹெலிபேடு உள்ளது. சுமார் 4 மீட்டர் மிதவை ஆழம்
கொண்டது. மணிக்கு 26 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இதன் கேப்டனாக கடலோர
காவல் படை டிஐஜி அந்தஸ்திலான அதிகாரி சர்மா உள்ளார். தொடர்ந்து 15 நாட்கள்
வரை கடலில் பயணம் செய்யும் திறன் கொண்டது. இதில் 5 சிறிய அதிவேக மீட்பு
படகுகளும் உள்ளன. இதற்கான விழா நாளை (21ம் தேதி) காலை வஉசி துறைமுகத்தில்
நடக்கிறது. விழாவில் கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் டப்ளியர்ஸ் தலைமை
வகிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
» நாளை மங்களம் தரும் ஆடிப்பெருக்கு விழா
» சர்வதேச ஆவண குறும்பட விழா: நாளை தொடக்கம்
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum