ரயிலை இயக்குவதில் தாமதம் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
ரயிலை இயக்குவதில் தாமதம் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
பீரங்கிகளை ஏற்றி வந்த சரக்கு ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால்
ராணுவ வீரர்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர்
நகரிலிருந்து 3ம் தேதி 33 பீரங்கி டேங்கர்களை ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடி
டாங்கித் தொழிற்சாலைக்கு சரக்கு ரயில் புறப்பட்டு வந்தது. இந்த சரக்கு
ரயிலில் பாதுகாப்புக்காக 72 ராணுவ வீரர்கள் உடன் வந்தனர். இந்த சரக்கு
ரயிலை பகலில் மட்டுமே இயக்க வேண்டும்.
இரவு நேரங்களில் முக்கிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம், அரக்கோணம் வந்தது.
பாதுகாப்பாக யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை
ரயில் புறப்பட்டு விடும் எனக்கருதி ராணுவ வீரர்கள் தயாரானார்கள். ஆனால்
பிற்பகல் 3 மணி வரை ரயில் புறப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் திரண்டு வந்து
பிற்பகல் 3 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும்
அலுவலகத்தில் அளித்தனர். அதில், ‘நீண்ட நேரமாகியும் ராணுவ சரக்கு ரயில்
புறப்படவில்லை. நாங்கள் சமைத்து சாப்பிடுவதற்கு போதிய தண்ணீர் வசதியும்
செய்து தரவில்லை.
ஒரு சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ரயிலை தாமதமின்றி
இயக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். ரயில்வே போலீசாரும், ரயில்வே
பாதுகாப்பு படையினரும் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அந்த சரக்கு
ரயிலுக்கு பைலட், கார்டு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, மாலை 4.05
மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகிஸ்தான் தேர்தல் பாதுகாப்புக்கு 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
» கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது.
» தாமதம் வேண்டாமே!
» பரதேசி தாமதம் ஏன்?
» ஸ்ரீராமராஜ்யம் வெளியீடு தாமதம்
» கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது.
» தாமதம் வேண்டாமே!
» பரதேசி தாமதம் ஏன்?
» ஸ்ரீராமராஜ்யம் வெளியீடு தாமதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum