ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்
Page 1 of 1
ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்
இந்த உணவிற்கு ஏலவே பல பெயர்கள் இருந்தாலும், தமிழில் நான் ஓர் பேரை
வைச்சிருக்கேனுங்க. அது தான் ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட். ஒல்லி
பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்டை எப்படிச் செய்வதென்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
*பாண் / துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாண் (தேவையான அளவு)
*முட்டை (தேவையான அளவு)
*கீரை (சிறிதளவு)
*முட்டை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை: பாணை பீஸ் பாணாக வாங்க முடிந்தவர்கள் வாங்கி
கொள்ளலாம். இல்லையேல் கடையில் பாணை வாங்கி சிறிய சிறிய துண்டுகளாக
வெட்டலாம். வெட்டிய பாணை இப்போது ஓர் ஓரமா வைச்சிடுங்க. அப்புறமா
முட்டையினை எடுத்து உடைத்து ஆம்லெட் போடுவதற்கு ஏற்றவாறு தயார் செய்து
கொள்ளுங்க. ஆம்லெட்டினுள் உப்பு போடும் போது, கையில் சிறிதளவு கீரை இலைகளை
கழுவி கையால் சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி முட்டையுடன் சேர்த்துக்
கொள்ளவும்.
இப்போது ஆம்லெட்டினை அடுப்பில் சட்டியினுள் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி
பொரித்துக் கொள்ளுங்கள். நன்றாகப் பொரிக்காது இளம் மஞ்சள் கலரில் (அரை
அவியல் பருவத்தில்) பொரித்து எடுத்து கொள்ளுங்க. உங்கள் கைவசம் உள்ள
பாணின் அளவிற்கு ஏற்றாற் போல முட்டையினையும் பொரிக்கவும்.
அப்புறமா இரண்டு வெட்டிய பாண் துண்டுகளை எடுத்து அதன் நடுவில் பொரித்த
ஆம்லெட் முட்டையினை வைத்து உண்டால்….அது தான் ஒல்லி பிரெட் சில்லி சிக்கன்.
(இப்படி உங்களுக்கு வேண்டிய அளவு பிரெட்டினுள் வேண்டிய அளவு முட்டையினை
வைத்து பல ஒல்லி பிரெட் சில்லி சிக்கனை நீங்க உருவாக்கி கொள்ளலாம்.)
விரும்பியவங்க கீரை சேர்க்கும் போது சிறிதளவு காளானையும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி முட்டையுடன் சேர்த்து பொரித்துக் கொள்ளலாம்.
அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி சிக்கன் என்று
வந்திருக்கே…எங்கே சில்லியை காணலை என்று யோசிக்கிறீங்களா? விரும்பியவங்க
ஆம்லெட் போடும் போது, சிறிதளவு சில்லியையும் சேர்த்துக்கிட்டா அது தான்
சில்லி சிக்கன் ஆம்லெட். எப்பூடி ஐடியா?
காலை உணவாக இந்த உணவினை நீங்க எடுத்துக்கலாம். குறைந்தது நான்கு துண்டு
நறுக்கிய பாண் (இரண்டு சோடி) ஒரு தனி நபருக்கு போதுமானது. அது தான் உங்கள்
எடையினையும் மெயிண்டேன் பண்ணிக்க உதவும். அடுத்த பாகத்தில் மதிய உணவு
ஒன்றினைத் தயாரிப்பதற்கு ஏற்ற குறிப்பினைப் பகிர்கிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum