தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்லி சிக்கன்

Go down

சில்லி சிக்கன்                            Empty சில்லி சிக்கன்

Post  ishwarya Wed May 22, 2013 2:22 pm

தேவையான பொருட்கள்:


எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க
வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி



செய்முறை



*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும். சில்லி சிக்கன் தயார்.

குறிப்பு:


* உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
* இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
* மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum