ஆவக்காய் ஊறுகாய்
Page 1 of 1
ஆவக்காய் ஊறுகாய்
என்னென்ன தேவை?
ஆவக்காய் மாங்காய் - 10
கடுகு -300 கிராம்
வெந்தயம் -300 கிராம்
மிளகாய்த்தூள் - 500 கிராம்
பூண்டு - 300 கிராம்
நல்லெண்ணெய் - 1 லிட்டர்
கல் உப்பு - 250 கிராம்.
எப்படி செய்வது?
மாங்காயை நன்றாக கழுவி, சுத்தமான துணியில் நன்றாக துடைத்து நிழலில் காயவைத்துக் கொள்ளுங்கள். துளியளவு கூட தண்ணீர் ஒட்டியிருக்கக்கூடாது. நன்கு உலர்ந்ததும் விதை ஓட்டோடு சேர்த்து நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய பீஸ்களையும் துணியால் சுத்தமாகத் துடைத்து உலரவையுங்கள்.
உப்பை நிழலில் உலர்த்தி பொடித்துக் கொள்ளுங்கள். பூண்டை உரித்து வெயிலில் காயவையுங்கள். கடுகையும், வெந்தயத்தையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த தூள்களோடு மிளகாய்த்தூள், உப்பு, பூண்டு சேர்த்து கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளுங்கள். வெட்டிய மாங்காய்த் துண்டுகளை நல்லெண்ணெயில் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள்.
வாயகன்ற ஒரு பீங்கான் ஜாடியில், ஊறிய மாங்காய் கொஞ்சம், எண்ணெய் கொஞ்சம், பிசைந்து வைத்துள்ள கலவை கொஞ்சம் என சிறிது, சிறிதாக கலந்து இறுக மூடி வைத்துவிடுங்கள். ஐந்துநாள் ஊறியபிறகு திறந்தால், எண்ணெய் ததும்பி நிற்கும் ஆந்திர ஆவக்காய் ஊறுகாய்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
» அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
» ஊறுகாய்
» மாங்காய் ஊறுகாய்
» பாகற்காய் ஊறுகாய்
» அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
» ஊறுகாய்
» மாங்காய் ஊறுகாய்
» பாகற்காய் ஊறுகாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum