தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளான் சாண்ட்விச்

Go down

காளான் சாண்ட்விச் Empty காளான் சாண்ட்விச்

Post  ishwarya Fri May 24, 2013 1:04 pm

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் - 6 துண்டு
காளான் - 1 கப்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1 (சிறியது)
இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• காளான், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, சீரக தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

• பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

• பின்பு அதில் காளான் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் மிளகு தூள் சேர்த்து வேக வைத்து இறக்க வேண்டும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து, மற்றொரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.

• இப்போது சுவையான காளான் சாண்ட்விச் ரெடி!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum