தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்

Go down

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர் Empty 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்

Post  ishwarya Fri May 24, 2013 12:57 pm

ண்டையார்பேட்டை, : மண்ணடி தம்பு செட்டி தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் 1672ல் வீர சிவாஜி வந்து வழிபட்டு சென்றதும், மகாகவி பாரதியார் பராசக்தியை நினைத்து பாடல் எழுதிய பெருமையும் கொண்டது.
இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி இதற்கான விழா துவங்கியது. இதை தொடர்ந்து, நேற்று காலை 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சிவசண்முக ஞானாச்சாரிய குருசாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கங்கையில் இருந்து கொண்டு வந்த 1500 லிட்டர் புனித நீர் மற்றும் பம்பை, யமுனையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை கோயில் கோபுர கலசத்தில் ஊற்றினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
இதில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, மேயர் சைதை துரைசாமி, பழ.கருப்பையா எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தனபால் முத்தையா, ராஜா, திருமகள், கவிதா, ஜோதிலட்சுமி மற்றும் கோயில் நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணிய ஆச்சாரி, அறங்காவலர்கள் மூர்த்தி, பஞ்சாட்சரம், ஜெகதீசன், வேணுகோபால், திருப்பணி கமிட்டி தலைவர் ஏழுமலை, ராமையன், காளிதாஸ் சிவாச்சாரியார், கமிட்டி உறுப்பினர் ஜெயபால், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. விழாவில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
»  திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
»  சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum