சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
Page 1 of 1

சுசீந்திரம்: சுசீந்திரத்தில் இன்று காலை மார்கழி திருவிழா தேரோட்டம்
நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து
தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்
மார்கழி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம்
திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு
கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நடந்தது. காலை 8.40 மணிக்கு
தேரோட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்கின.
மேள தாளம் முழங்க உற்சவ
மூர்த்தி திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது கோயில் நுழைவு
வாயிலில் இரு பக்கம், துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை
செலுத்தப்பட்டது. அதன்பிறகு விநாயகர் தேரில் விநாயகர், சாமி தேரில்
உற்சவர், அம்மன் தேரில் அம்மன் வைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம்
தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி பழனிசாமி தொடங்கி
வைத்தார். இதையடுத்து பிள்ளையார் தேர் முன் செல்ல அதை தொடர்ந்து சுவாமி
தேர், அம்மன் தேர் சென்றன.
பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத
வீதிகளையும் தேர்கள் வலம் வந்தன. அம்மன் தேரை பெண்கள் மட்டும் வடம்
பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு
இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நான்கு ரத
வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று 10ம் நாள் விழாவையொட்டி
அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு
திருஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
பக்தர்கள் கூட்டத்தில்
புகுந்த யானை: தேரோட் டத்திற்காக தேருக்கு பின்னால் அலங்கரிக்கப்பட்ட யானை
வந்தது. சுவாமி தேர் கோயிலுக்கு முன் வந்ததும், யானையை கோயி லின்
எதிர்புறம் உள்ள சன்னதி தெருவுக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது
தேருக்கு முன் பகுதியில் நின்ற கூட்டத்துக்குள் யானை புகுந்தது. யானை
புகுந்ததும் அந்த பகுதியில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடினர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார்
கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். கூட்டத்துக்குள் புகுந்தாலும் அமைதியாக யானை
அங்கிருந்து சென்றது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
» ஆடி கிருத்திகை விழா தொடங்கியது : திருத்தணி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum