திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம்
Page 1 of 1

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வியாழக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் தான். இதனால் ஆண்டு தோறும் தை மாதம் உத்திரநட்சத்திரத்தன்று திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து திருக்கோயில் மகா மண்டபத்தில் வைத்து மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் ஸ்ரீ சண்முகருக்கும், பெருமாள் கோயில் முன்பு பெருமாளுக்கும் என மொத்தம் 5 கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து காலை 9.10 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 9.20 மணிக்கு மேல் மூலவர், வள்ளி, தெய்வானைக்கு போத்திமார்களும், ஸ்ரீ சண்முகருக்கு சிவாச்சார்யார்களும், பெருமாளுக்கு பட்டாச்சார்யார்களும் கும்பாபிஷேகம் செய்தனர்.
இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் பக்தர்கள் கொடுத்த புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வருஷாபிஷேக விழா நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன், கண்காணிப்பாளர்கள் இரா.சாத்தையா, ராமசாமி, சுப்பிரமணியன், கணேசன், உள்துறை மேலாளர் மாரிமுத்து, உள்துறை மணியம் ராமசாமி, உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
» திருச்செந்தூர் முருகன் 100
» திருச்செந்தூர் முருகன் சிலை
» 25-ந்தேதி ஆடிக்கிருத்திகை; வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்
» திருச்செந்தூர் முருகன் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum