தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கடங்கள் போக்குவாள் சாமளம்மன்

Go down

சங்கடங்கள் போக்குவாள் சாமளம்மன் Empty சங்கடங்கள் போக்குவாள் சாமளம்மன்

Post  ishwarya Fri May 24, 2013 12:07 pm

விண்ணை முட்டும் ராஜகோபுரம் இல்லை, பிராகாரமும் இல்லை. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும் தேவையில்லை. அர்ச்சனை டிக்கெட், உண்டியலில் காசு, அர்ச்சகருக்கு தட்சணை என்று எந்தச் செலவும் இல்லை. அப்படி ஒரு தெய்வத் திருத்தலம், திருத்தணி அருகே நகரியில் அமைந்துள்ளது. இங்கே அருள் புரியும் அன்னை, சாமளம்மா தேவி. பலா மரத்தடியில் அமைதியே உருவாய், மூன்றடி உயரத்தில் சங்கு, அங்குசம், வரத அபயக்கரங்களுடன் பொலிந்து தரிசனம் தருகிறாள். அம்பிகை இடது காலை மடித்துக்கொண்டு, தொங்கவிட்ட வலது காலை தாமரை மலர் மேல் பதித்தபடி அமர்ந்திருக்கிறாள். இயற்கை எழில் கொஞ்சும் திறந்தவெளியில், தன்னை வழிபடும் அன்பர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி வழங்குகிறாள் இந்தத் தாய்.

தேவியின் விக்ரகம் உயிரோட்டமாய் உள்ளதை பார்த்துதான் அனுபவிக்க வேண்டும். மழலை வரம் வேண்டுவோர் தூளியில் கல்லைப் போட்டு, அம்பிகை வீற்றிருக்கும் மரத்தில் கட்டி பிரார்த்தனை செய்தால் மறு வருடமே மழலை செல்வம் அடைகிறார்கள். இந்த அம்பிகையால் பலனடைந்தவர்கள், இவ்வூரில் வசிக்கும் சுமங்கலிகளுக்கு மஞ்சள் சேலை, வளையல்கள், மங்கலப் பொருட்களை அளித்து தம் நன்றியை செலுத்துகின்றனர். ராகு-கேது, நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்கு பரிகார தேவியாய் அருளும் நாகம்மாவை வணங்க, தோஷங்கள் நீங்குகின்றன

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum