சங்கடங்கள் தீர்க்கும் சண்டி யாகம்
Page 1 of 1
சங்கடங்கள் தீர்க்கும் சண்டி யாகம்
உலக நன்மைக்காக நட்சத்திர சண்டி யாகத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மந்திரப் பிரயோகத்துடன், தொடர்ந்து 27 நாட்களுக்கு, 108 ஊர்களில் நடத்த வேண்டும் என்று சங்கல்பித்துக் கொள்வது மிகப் பெரிய ஒரு முயற்சியின் அடிப்படை. என்றாலும் அந்த முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடாமல், ஊக்கம் குறையாமல் ஈடுபடுவது என்பது ஒரு சாதனைதான். அந்த வகையில், 12 முறை வெற்றிகரமாக பகவதியின் அருளால் யாகத்தினை நடத்தி முடித்துள்ளார் பூஜ்ய ஸ்ரீ பிரணவானந்த சுவாமிகள். புதுக் கோட்டை சாந்தானந்த சுவாமிகளிடம் சன்யாச தீட்சை பெற்று தேவியை அனவரதமும் ஆராதித்து வருபவர் இவர்.
மேட்டூர் ராஜகோபால கனபாடிகள் அவர்களிடம் க்ரமம் வரை பூரணமாகவும், க்ருஷ்ண யஜுர்வேதம் மற்றும் காவ்ய பாடங்களும் பயின்றவர், பிரணவானந்த சுவாமிகள். நாகரத்ன தீட்சிதரிடம் ஸ்ரீவித்யா தீட்சை பெற்று தேவியை ஆராதிக்கத் தொடங்கினார். தன் 18ம் வயதிலேயே புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகளால் சேலம் ஸ்கந்தாஸ்ரமம் அஷ்டதசபுஜ மகாலட்சுமி சந்நதியில் சந்யாச ஆச்ரமம் பெற்றவர். சாந்தானந்த சுவாமிகள், பிரணவானந்தருக்கு பராக்ஷோடஸீ மந்திரத்தையும் தியான ஸ்லோகத்தையும் உபதேசித்து ஆசிர் வதித்தார். அந்த தேவி மந்திரத்தை பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஜபித்த பலத்தினால் 2008ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள ஐயர் மலையில், பராக்ஷோடஸீ தேவியை சுமார் ஐந்தடி உயரத்துக்கு வடிவமைத்து, ஆலயமும் நிர்மாணித்தார்.
1995ம் ஆண்டு 27 நட்சத்திர மண்டல லலிதா ஸஹஸ்ரநாம கோடி அர்ச்சனை செய்தார். அப்போது, உலக நன்மைக்காக 108 அம்மன் தலங்களில் சண்டி யாகம் செய்வது என சங்கல்பம் மேற்கொண்டார். ஆனால், 2006ம் ஆண்டிற்குள், தேவியின் அருளால் அவரால் 336 தலங்களில் சண்டி யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. மீண்டும் இன்னொரு சுழற்சி.
மீண்டும் 108 தலங்களில் அதே யாகம் இயற்றும் சங்கல்பம். இம்முறை, 27 நட்சத்திர தினங்களிலும் சண்டி யாகம் புரிவது என்று இறையருளால் தீர்மானித்தார். பக்தர்களின் உதவியாலும், பராம்பிகையின் கருணையாலும் 12 இடங்களில் அந்த மகா சண்டி யாகத்தை 27 நட்சத்திரங்களும் போற்றும் வண்ணம் நிறைவு செய்திருக்கிறார். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் மகரிஷிகள் வகுத்தளித்த முறைப்படி பூஜைகள், யாகங்கள், உபன்யாசங்கள் செய்து வருகிறார் பிரண வானந்தர்.
பூர்ணாஹுதி தினத் தன்று யாகத்தில் திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பழங்கள், பட்சணங்கள் என எல்லாவித மூலிகைப் பொருட்கள் எல்லாம் ஆஹுதியாக இட்டு பாவனோபநிஷத்தை கணீரெனக் கூறி பின் உலக நன்மைக்காக தமிழில் கூட்டுப் பிரார்த்தனை செய்வது பிரணவானந்த சுவாமிகள் பின்பற்றும் முறை.
27 நாட்களிலும் யாகத்தின் முடிவில் உலகம் நன்றாக இருக்க வேண்டும்; கலாசார சீர்கேடுகள் தொலைய வேண்டும்; மக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என தமிழில் கூற, அதை குழுமியிருக்கும் பக்தர்கள் ஒரே குரலாய் திருப்பிக் கூற, அந்த அதிர்வலைகள், அதுபோன்ற சீர்கேடுகளுக்குத் துணைபோகிறவர்களின் நெஞ்சில் சென்று தைக்கும் ஒரு டெலிபதி நிகழ்வாக அமைவது வழக்கம்.
12ம் முறையாக, உலக நன்மைக்காக 27 தினங்கள் 27 நட்சத்திர சண்டி யாகம் அண்மையில் மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதுபோல் அடுத்தடுத்து பல ஊர்கள் இந்த யாகத்தால் பெருமையும், பேரருளும் பெறப் போகின்றன.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சங்கடங்கள் தீர்க்கும் சண்டி யாகம்
» சண்டி யாகம்
» யாகம்...........
» சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்
» சங்கடங்கள் போக்குவாள் சாமளம்மன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum